ஷோகேஷில் இருந்த நகையை அலேக்காக தூக்கிய நபர்.. சிசிடிவி காட்சிகள் வைரல்! - Theft in Kovai Jewelry shop - THEFT IN KOVAI JEWELRY SHOP
🎬 Watch Now: Feature Video
Published : Jul 12, 2024, 6:37 PM IST
கோயம்புத்தூர்: கோவையில் உள்ள ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதிகளில் விஷ்ணு என்பவர் நகைக்கடைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரின் ராஜவீதியில் உள்ள நகைக்கடைக்கு, வியாழக்கிழமை காலை மர்ம நபர் ஒருவர் நகை வாங்க வருவது போல் பத்து சவரன் தங்கச் சங்கிலியை பார்வைக்காக கேட்டுள்ளார். பின் அதை கையில் வாங்கி திடீரென கீழே போட்டுள்ளார். ஆனால் கடையில் இருந்த அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்ததால் அதை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, டிசைன் சரியில்லை எனச் சொல்லிவிட்டு கடையைவிட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில், மீண்டும் மதியம் வேளையில் நகைக்கடை உரிமையாளர் விஷ்ணு வீட்டுக்கு உணவு அருந்தச் சென்றுள்ளார். அப்போது விஷ்ணுவின் தந்தை கடையில் இருந்த நிலையில், காலையில் இந்த கடையில் பார்த்த டிசைன் போல் எங்கும் கிடைக்கவில்லை எனக் கூறி, அவரை திசைதிருப்பி, ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை திருடிவிட்டு பின் நகை வேண்டாம் எனச் சென்றுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர் தந்தை, மகனுக்கு தகவல் அளித்துள்ளார். பின் சிசிடிவி கேமரா மூலம் அந்த நபர் நகையை திருடியது அம்பலமானது. இதுகுறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.