பாபநாசம் டூ வள்ளியூர்.. காரில் சவாரி செய்த 8 அடி நீள மலைப்பாம்பு- நெல்லையில் நடந்த சுவாரஸ்யம்..!
🎬 Watch Now: Feature Video
Published : Feb 14, 2024, 7:01 AM IST
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தெற்கு பகுதி நான்கு வழிச்சாலையில் உள்ள டெரிக் டாடா கார் ஷோரூமிற்கு, ராதாபுரத்தை சேர்ந்த பழனி என்பவர் தனது டாடா டியாகோ(TATA Tiago) காரினை சர்விஸ்க்கு விட்டுள்ளார். பின்னர், வழக்கம் போல ஷோரூம் ஊழியர்கள் சர்வீஸ் செய்வதற்காக கார் பானட்டைத் திறந்தபோது மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 8 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். கார் சர்வீஸ்க்காக நிறுத்தப்பட்ட இடம் நகர் மற்றும் குடியிருப்பு மிகுந்த பகுதியாகும்.
எனவே, அங்கு எப்படி மலைப்பாம்பு வந்தது என எல்லோருக்கும் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் விசாரித்த போது, பழனி சமீபத்தில் பாபநாசம் வனப்பகுதிக்குச் சென்று வந்துள்ளார். எனவே, அங்கிருந்து மலைப்பாம்பு வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.