திடீரென வேலி தாண்டிய லாரி.. நூழிலையில் உயிர்தப்பிய தாய் - மகள்! - Lorry Accident CCTV - LORRY ACCIDENT CCTV
🎬 Watch Now: Feature Video


Published : Jul 21, 2024, 3:08 PM IST
|Updated : Jul 21, 2024, 4:31 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து ஓசூர் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு வேலியில் மோதியுள்ளது.
இதில், சாலை ஓரம் இருந்த தடுப்பு வேலிகள் சுக்குநூறாக நொறுங்கி, கண்டெய்னர் லாரி சர்வீஸ் சாலையில் நின்றுள்ளது. இந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அச்சாலை வழியாக சென்ற தாய் மற்றும் மகள் கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து லாரியுடன் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில், இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு, விபத்து ஏற்படுத்திவிட்டு லாரியுடன் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி தடுப்பு வேலியில் மோதி தாய் மற்றும் மகள் உயிர் தப்பிய சம்பவம் குறித்த சிசிடிவி வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.