ETV Bharat / technology

WhatsApp மெசேஜ் அனுப்ப இனி மொபைல் எண் தேவையில்லை.. வெளியான நியூ அப்டேட்! - WhatsApp New Update - WHATSAPP NEW UPDATE

WhatsApp New PIN Lock Feature: வாட்ஸ்ஆப் பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில், சமீபத்தில் பல புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் குறித்த கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 22, 2024, 8:12 PM IST

ஹைதராபாத்: தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் என அனைத்து விதமானவற்றிற்கும் பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக, வாட்ஸ்ஆப் தனது பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வாட்ஸ்ஆப் சமீபத்தில் பயனர்களின் புரொஃபைலை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் வசதியை நீக்கியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மொபைல் எண்ணைப் பயன்படுத்தாமல், 'யூசர் நேம்' (user name feature) மட்டும் பயன்படுத்தி செய்திகளை அனுப்ப முடியும் என்ற மற்றொரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

யூசர் நேம் பயன்பாடு: நம்மில் பலரும் முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் தங்களது தொலைபேசி எண்ணை அவ்வளவு எளிதில் கொடுப்பதில்லை. தொலைபேசி எண்ணைக் கொடுத்தால் எதிர்காலத்தில் சிக்கலைச் சந்திக்க வேண்டி வரும் என அஞ்சுகின்றனர். ஆனால், தற்போது வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ள 'யூசர் நேம்' வசதியால் இதுபோன்ற பிரச்னைகள் இனி வராது என்கின்றனர்.

அதாவது, புதிதாக அறிமுகமாகும் நபர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்கள், தங்களது தொலைபேசி எண்ணுக்குப் பதிலாக பயனர் பெயரை மட்டும் வழங்கினால் போதுமானது. அதேநேரம், ஒருவருக்கு யூசர் நேம் தெரிந்தால் மட்டும் மெசேஜ் அனுப்ப இயலாது. ஏனென்றால், அறிமுகமில்லாத நபருடன் முதல்முறையாக பேச, 'பயனர் பெயருடன்' அவர்கள் உருவாக்கி வைத்துள்ள பின் எண்ணையும் எண்டர் செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்டர் பின் அவசியம்: வாட்ஸ்ஆப் கொண்டு வந்துள்ள இந்த புதிய வசதியில், பயனர் பெயருடன் நான்கு இலக்க பின்னையும் உருவாக்க வேண்டியது கட்டாயமாகும். நீங்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ள ஒருவருடன் தனித்தனியாக பின்னை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் செய்திகளைக் கட்டுப்படுத்த வாட்ஸ்ஆப் இந்த வசதியைதைக் கொண்டு வந்துள்ளது.

தொடர்ச்சியாக வரும் அப்டேட்கள்: இதற்கு முன்னதாக, ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க, 'சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்' (Silence Unknown Callers) என்ற வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியது. இதேபோல், முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க இந்த 'யூசர் நேம்' வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வாட்ஸ்ஆப் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் செய்திகளை தற்காலிகமாக தடுக்கும் வசதி வாட்ஸ்ஆப் கணக்கில் கொண்டு வரப்படும்.

இதன் மூலம் பயனர்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும் என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாது, வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசில் வைக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டோரிக்கள் ஆகியவற்றிற்கு லைக் செய்யும் வசதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் தொடங்கியுள்ளதாக வாட்ஸ்ஆப் கூறியுள்ளது. மேலும், தற்போது ​​இந்த அப்டேட்கள் அனைத்தும் பரிசோதனையிலேயே உள்ளது என்றும், விரைவில் வெளியிடப்படும் என்றும் வாட்ஸ்ஆப் அப்டேட்டர் வபேட்டா இன்ஃபோ (Whatsapp Updater Wabeta Info) தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரூ.15,000 பட்ஜெட்டில் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.. முழு பட்டியல் இங்கே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.