ETV Bharat / technology

ஆட்டோமேட்டிக் கார்களை விட மேனுவல் கார்களை தான் இந்தியர்கள் விரும்புகிறார்களா? - என்ன காரணம்.. - Why Indians Prefer Manual Cars

Automatic Vs Manual Car: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மேனுவல் கார்களை வாங்குவதற்கான முக்கிய காரணம் என்ன என்று பார்த்தோமானால், ஆட்டோமேடிக் கார்களின் விலை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

what-is-the-reason-of-indians-prefer-manual-cars-over-automatic-car
ஆட்டோமேட்டிக் கார்களை விட மேனுவல் கார்களை தான் இந்தியர்கள் விரும்புகிறார்களா? - என்ன காரணம்..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 7:26 PM IST

சென்னை: உலகளவில் பார்த்தோமென்றால் பலரும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AMT - Automated Manual Transmission) கார்களையே அதிகமாகத் தேர்வு செய்து வருகின்றனர். இந்த ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும் போது கிளட்சை மிதித்துக்கொண்டு கியரை மாற்றத் தேவையில்லை. ஆக்சிலேட்டரை மட்டும் அழுத்திக்கொண்டு செல்லாம். மேனுவல் கார்களுடன் ஒப்பிடுகையில், ஆட்டோமேட்டிக் காரை ஓட்ட கற்றுக்கொள்வதும் எளிது. இவ்வளவு வசதிகள் நிறைந்த கார்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், இந்தியாவைப் பொறுத்தமட்டில், மேனுவல் கார்களையே மக்கள் அதிகமாக வாங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் விலை மாறுபாடுகள்: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மேனுவல் கார்களை வாங்குவதற்கான முக்கிய காரணம் என்ன என்று பார்த்தோமானால், ஆட்டோமேடிக் கார்களின் விலை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கார்களுடன் ஒப்பிடும் போது, மேனுவல் கார்களின் விலைக்குறைவு. ஸ்பின்னி அறிக்கையின் படி, மேனுவல் காரை விட ஆட்டோமேட்டிக் கார் விலை 80 ஆயிரம் ரூபாய் அதிகம். இதனால் இந்தியர்கள் பலரும் மேனுவல் கார்களை தேர்ந்தெடுப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காப்பீட்டுச் செலவுகள்: ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தொழில்நுட்பம் காரணமாக ஆட்டோமேட்டிக் கார் வாங்குவோருக்கு காப்பீட்டுச் செலவுகள் அதிகமாகிறது. ஆகவே காப்பீட்டுச் செலவுகளில் பணத்தைச் சேமிக்க மேனுவல் கார்களை அதிகமாகத் தேர்வு செய்கின்றனர்.

பராமரிப்பு செலவுகள்: மேனுவல் கார்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதற்குப் பராமரிப்பு செலவுகளும் ஒரு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை விட, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களின் பராமரிப்பு செலவுகள் அதிகம். ஆட்டோமேட்டிக் கார்களுடன் ஒப்பிடுகையில், மேனுவல் கார்களில் பயன்படுத்தப்படும் ஆயில் விலையும் குறைவு.

நம்பகத்தன்மை: மேனுவல் கியர்பாக்ஸ் தொழில்நுட்ப ரீதியான மேம்பட்டது மட்டுமின்றி, நீண்ட காலத்திற்குச் செயல்படுத்த முடியும். மேனுவல் கியர்பாக்ஸை விட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நம்பகத்தன்மை குறைவு என மக்கள் கருதுகிறார்கள். இதுவே, மக்கள் மேனுவல் கார்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம் எனலாம்.

கியர்பாக்ஸ் பிரச்சினைகள்: மேனுவல் கார்களில் உள்ள கியர்பாக்ஸ் அமைப்பை விட ஆட்டோமேட்டிக் கார்களில் உள்ள கியர்பாக்ஸ் அமைப்பு வேறுபட்டது. சற்று சிக்கலானதும் கூட. மேனுவல் கார் மெக்கானிக்கை அணுகுவது எளிது. ஆனால், ஆட்டோமேட்டிக் கார்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், மெக்கானிக்கை அணுகுவது சற்று கடினம். ஆட்டோமேட்டிக் கார்களின் உதிரிப் பாகங்கள் கிடைப்பதும் கடினம்.

அதிக வெப்பம், ஜெர்கி ரைடுகள்: போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் தானியங்கி கியர்பாக்ஸை இயக்குவது அதிக வெப்பம் அடையச் செய்யலாம். கார் ஓட்டுநர் பிரேக்கில் கால் வைத்து வேகத்தைக் குறைக்க வேண்டும். ஆனால் மேனுவல் கார்களின் இது போன்ற பிரச்சினைகள் இருக்காது. இது போன்ற காரணங்களாலே இந்திய மக்கள் ஆட்டோமேட்டிக் கார்களை விரும்புகின்றனர்.

இதையும் படிங்க: 46 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.