ஹைதராபாத்: கடந்த ஜூன் 5ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து நாசா மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து, போயிங் ஸ்டார்லைனர் (Boeing Starliner) எனப்படும் சோதனை விண்கலத்தை விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) அனுப்பியது. இந்த சோதனை முயற்சியானது, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் அபூர்வ முயற்சியாகும்.
இந்த சோதனை விண்கலனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விஞ்ஞானியான புட்ச் வில்மோர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நாசா மற்றும் போயிங் நிறுவனத்தின் திட்டப்படி பார்த்தால், இந்த சோதனை விண்கலன் ஜூன் 15ஆம் தேதியன்று பூமியை வந்தடைந்து இருக்க வேண்டும்.
ஆனால் வரவில்லை. இங்கு ஆரம்பித்தது சிக்கல், அவர்கள் அனுப்பி வைத்த விண்கலன் செல்லும் வழியில் ஹீலியம் கசிவுகள் ஏற்பட்டு, உந்துதல் பிரச்னை உருவாகியுள்ளது. அதனால் திட்டமிட்டபடி ஜூன் 15ஆம் தேதி பூமிக்கு தரையிறங்கி இருக்க வேண்டிய சூழல் தற்போது தாமதமாகி, இன்னும் விண்ணை சுற்றிக்கொண்டு பூமிக்கு திரும்ப வழி இல்லாமல் உள்ளனர்.
இதைக் கேட்பதற்கு இரவு கனவில் வருவது போலவோ, இல்லை ஹாலிவுட் படத்தில் வருவது போலவோ இருக்கலாம். ஆனால் நிஜம், மனிதர்களாக இருந்து விண்ணை வட்டமடித்துக் கொண்டு இருக்கும் நிலை ஹீரோஸ்டிகாக இருக்கலாம். ஆனால், சிந்தித்துப் பாருங்கள்.. தற்போது நீங்கள் விண்ணில் இது போல் சிக்கிக் கொண்டால் என்ன செய்வீர்கள்? அனைவரும் கரோனா ஊரடங்கு காலத்தை நினைவு கூர்ந்தால் தனிமையில் சிக்கிக் கொள்வதன் வலியை உணரலாம்.
இந்நிலையில், இந்த சோதனை முயற்சியில் போயிங் நிறுவனம் குறித்து அறிய வேண்டியது அவசியமாகிறது. போயிங் நிறுவனம் என்பது வணிக ரீதியாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியது, அதற்கு கருவி உதவிகளை செய்தது நாசா. அப்படி இருக்க, விண்வெளி வீரர்கள் குறித்து இதுவரை போயிங் நிறுவனம் எந்த அறிவிப்பும் தரவில்லை.
நாசா கூறுவதை வைத்து பார்த்தால், அந்த விண்கலன் 2025ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் பூமிக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால், விண்வெளி வீரர்களின் நிலை குறித்து பரிதாபகரமான தகவல்களை கூறுகிறது நாசா. மேலும், விண்கலன் கோளாறுகள் சரி செய்யப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் மட்டும் தரப்படும் நிலையில், பாதுகாப்பான தரையிறக்கம் குறித்து எந்த நிச்சயத்தையும் நாசா தரவில்லை.
எட்டு நாட்களில் பூமிக்கு வந்து இறங்க இருந்த சுனிதா மற்றும் வில்மோரின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். நாம் பேருந்திலோ அல்லது ரயிலிலோ நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது, எப்போதுதான் நாம் இறங்கும் இடம் வரும் என நினைப்பது உண்டு. அந்த நேரத்திற்காக காதித்திருப்பது உண்டு. அந்த காத்திருக்கும் நொடிகள் நமது வாழ்வில் நீண்ட பொழுது போல் தோன்றும். அதேபோல் தான் ,பழுதான விண்கலனில் எப்போது பூமியில் இருக்கும் தனது வீட்டிற்குச் செல்வோம் என இருவரும் எதிர்பார்த்து இருக்கும் திக் திக் நொடிகள் குறித்து வார்த்தையால் கூற முடியாது.
இந்நிலையில், அவர்களது மனநிலை குறித்து நாசாவின் ஆராய்ச்சி குழு கண்காணித்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில், மனிதன் அவசர காலத்தில் காத்திருக்கும் போது இருக்கூடிய மனநிலையும், சாதாரண மன நிலையில் காத்திருக்கும் போது ஏற்படும் எண்ண ஓட்டத்தையும் ஒப்பிட உள்ளனர். மனிதன் ஒரு இடத்தை விட்டு தப்பித்துச் செல்ல வேண்டும் என தகுந்த நேரத்திற்காக காத்திருக்கும் மனநிலை மிகுந்த தவிப்புகள் நிறைந்த மனநிலையாகும்.
அண்டார்டிகாவில் ஒரு வருடம்: ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இன்ஸ்டிடியூட்டோ அன்ட்ரிகோ அர்ஜென்டினோ (Instituto Antrtico Argentino), பிரெஞ்சு போலார் நிறுவனம் (French Polar Company) மற்றும் இத்தாலிய அண்டார்டிக் திட்டம் (Italian Antarctic Project) போன்ற நிறுவனங்கள், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து மனிதர்கள் உறைந்த கண்டத்தில் தனிமையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என 6 மாதங்கள் கண்காணிப்பு ஆராய்ச்சி நடத்துகின்றனர்.
இந்த ஆராய்ச்சி மார்ச் முதல் அக்டோபர் வரையிலான குளிர்காலத்தின் மாற்றங்களோடு ஒப்பிடப்படுகிறது. இதில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும் மனிதர்கள் மே முதல் ஆகஸ்ட் வரையான மாதங்கள் முழு இருளில் -60 டிகிரியில், 160 கிமீ/ம காற்றின் வேகத்துடன் கிட்டத்தட்ட அனைத்து உடல் செயல்பாடுகளை தடுக்கும் புயல்களை எதிர்கொள்கின்றனர்.
அப்போது மனிதன் அண்டார்டிகாவில் தனது நேரத்தை எவ்வாறு கடக்கிறான் என ஆராய்ச்சி செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், மனிதர்களிடம் முந்தைய மாத நேரத்தை ஒப்பிடுகையில், நேரம் எப்படி கடந்து செல்கிறது என்று கேட்கப்பட்டு வெளி உலகத்துடன் ஒப்பிடப்படுகிறது.
இந்த ஆய்வின்போது, மனிதர்களின் பதில் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் படி 80 சதவீத பேர் பிஸியாக இருக்கும் நேரம் விரைவாக கடக்கிறது எனவும், 3 சதவீதம் பேர் நேரம் உண்மையில் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறினர். ஆனால், இந்த ஆய்வானது, நீண்ட இரவுகள் மற்றும் செய்வதற்குச் சிறிதும் வேலை இல்லாதபோதும் நிகழ்த்தப்பட்டதால், அந்த 3 சதவீத பேர் கூறியது போல் நேரம் உண்மையில் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதுதான் உண்மையான ஆராய்ச்சி முடிவு.
தற்போது விண்ணில் சிக்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் அண்டார்டிகா போன்ற இடத்தில் சிக்கவில்லை என்றாலும், போயிங் வின்கலத்தின் உள்ளே இருக்கும் 747 விமானத்தின் இடத்தில் தனிமையில் நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அவர்களின் திக் திக் நிமிடங்கள் நிறைவடைந்து பூமிக்கு நலத்துடன் தரையிறங்கும் வருகை குறித்து நாசாவும் காத்திருக்கும். இந்தச் சூழல், நேரத்தின் முக்கியத்துவத்தையும், காத்திருப்பின் தேவையையும் உலகிற்கு எடுத்துக் கூறுகிறது எனலாம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தயாராகுது ககன்யான்.. இஸ்ரோ விஞ்ஞானியின் பிரத்யேக பேட்டி!