டெல்லி : தடையில்லா இணை சேவைகளை வழங்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் 46 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி நிலையத்தில் மறுசுழற்ச்சியில் முறையில் தயாரிக்கப்படும் பால்கன் 9 ராக்கெட் மூலம் இரண்டு தவணையாக மொத்தம் 46 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும், செயற்கை கோள்கள் பூமியின் குறைந்த சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஸ்டார்லிங்க் திட்டத்தின் முதல் கட்ட பூஸ்டர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது வரை 10 விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : யூடியூப்பை குறிவைக்கும் எலான் மஸ்க்! எக்ஸ் தளத்தில் புது வசதிகள் அறிமுகம் செய்ய திட்டம்!