ரியல்மி மொபைல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி ஸ்மார்ட்போன் தொகுப்புகளில் ஜிடி மாடல்கள் பயனர்களின் விருப்பத்தேர்வாக இருந்து வருகிறது. இந்த நேரத்தில் புதிய ஜிடி 7 ப்ரோ மாடலை நிறுவனம் அறிமுகம் செய்து, அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
அந்த அதிர்ச்சி வைத்தியத்திற்கு முக்கியக் காரணம், இந்த ஜிடி 7 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite Soc) தான். இதனுடன் 120W வேகமான சார்ஜிங் ஆதரவு, பெரிய 6,500 mAh பேட்டரி, சோனி கேமரா போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்தியாவில் நவம்பர் 26ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ விலை
Power beyond limits with India’s first Snapdragon 8 Elite! Mark your calendars for 26th November, 12 PM. The #realmeGT7Pro is almost here. #GT7ProFirst8EliteFlagship
— realme (@realmeIndia) November 5, 2024
Know more: https://t.co/5jeSo3hvgZ https://t.co/4o7hvqbnKb#DarkHorseofAI #amazonIndia #ExploreTheUnexplored pic.twitter.com/bfBtA0hBT1
ரியல்மி ஜிடி 7 ப்ரோ போனின் அடிப்படை மாடலான 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜின் விலை விலை சுமார் ரூ.44,999 (CNY 3,699) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ மொபைல் வகைகள் | எதிர்பார்க்கப்படும் விலை |
12ஜிபி + 256ஜிபி | ரூ.44,999 |
12ஜிபி + 512ஜிபி | ரூ.48,999 |
16ஜிபி + 256ஜிபி | ரூ.48,999 |
16ஜிபி + 512ஜிபி | ரூ.54,999 |
16ஜிபி + 1டிபி | ரூ.59,999 |
இந்த போன் சீனாவில் ரியல்மி சீனா இணையதளம் வழியாக பயனர்கள் வாங்கமுடியும். இது மார்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் எடிஷன், ஸ்டார் டிரெயில் டைட்டானியம், லைட் டொமைன் ஒயிட் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
Get ready to explore a new universe of power and performance! #GT7ProFirst8EliteFlagship?
— realme (@realmeIndia) November 4, 2024
The #realmeGT7Pro is launching in India on November 26th, 2024, at 12 PM.
Know more:https://t.co/2ESy9OWO4L https://t.co/7yZs3Cnf4n #amazonIndia #DarkHorseofAI #ExploreTheUnexplored pic.twitter.com/O9FXYuBGLt
இந்த திறன்வாய்ந்த சிப்செட் மற்றும் அம்சங்கள் அடங்கிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை திறன்பட செயல்படுத்த 6,500 mAh சக்தி கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஊக்கமளிக்க 120W வேகமான சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பிற்காக ஐபி68 மற்றும் ஐபி69 தர சான்றிதழ்களையும் ரியல்மி ஜிடி 7 ப்ரோ கொண்டுள்ளது. கூடுதலாக இதன் இணைப்பு ஆதரவுகளாக அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், வைஃபை 7, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்.எஃப்.சி, GALILEO, Beidou, டைப்-சி போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ அம்சங்கள்
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78-அங்குல (இன்ச்) 2K எகோ 2 ஸ்கை ஸ்கிரீன் (Eco2 Sky Screen) அமோலெட் டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 120Hz ரெப்ரெஷ் ரேட், 2,600Hz டச் சேம்ப்ளிங் ரேட், 6,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பாகப் பார்க்கப்படுவது குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் தான். இதனுடன் 16ஜிபி வரை ஆதரவளிக்கும் LPDDR5X ரேம், 1டிபி வரை கொடுக்கப்பட்டுள்ள UFS 4.0 ஸ்டோரேஜ் கூடுதலாக ஸ்மார்ட்போனுக்கு வலுவைச் சேர்க்கின்றன. மேலும், புதிய ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ரியல்மி UI 6.0 இயங்குதளம் ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனை இயக்குகிறது.
இதையும் படிங்க |
கேமராவைப் பொருத்தவரை ரியல்மி ஜிடி 7 ப்ரோ போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் அடங்கிய அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சல் சோனி IMX906, இதனுடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் லென்ஸ், 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவை இணைந்து சிறந்த படங்களை பதிவு செய்வதற்கு உதவுகின்றன. செல்ஃபி, வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா முகப்புத் திரையின் பஞ்ச் ஹோலில் இணைக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.