ETV Bharat / technology

ஆஃப்-ரோடு ரைடர்களுக்கான மஹிந்திராவின் புதிய படைப்பு.. Mahindra Thar ROXX ஸ்பெஷல் என்ன? முழு விவரம்! - Mahindra Thar ROXX Specifications

Mahindra Thar ROXX: இந்திய கார் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் அனைத்து வேரியண்ட்களின் வசதிகள் மற்றும் விலைகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

Mahindra Thar ROXX
Mahindra Thar ROXX (Credits - Mahindra Website)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 4:47 PM IST

ஹைதராபாத்: மஹிந்திரா தார் (Mahindra Thar) முதன்முதலில் 2010ஆம் ஆண்டில் மஹிந்திரா லெஜெண்டின் நவீனமயமாக்கப்பட்ட பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு 4x4 டிரைவ் வசதி கொண்ட ஆஃப்-ரோடு எஸ்யூவி ஆகும். இது 1980களில் இருந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா MM 540 வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகப்பட்டதாகும். இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கையாளக்கூடிய கரடுமுரடான, நம்பகத்தன்மையான மற்றும் விலை குறைவான ஆஃப்-ரோடு வாகனமாக தார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் (Mahindra Thar) முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதும், மோட்டார் ஆர்வலர்களை முதல் பார்வையிலேயே, தாரை காதலிக்க வைத்தது. இதனால் இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தும் காராக மஹிந்திரா தார் பிரபலமடைந்தது. அந்த வகையில், மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராக்ஸ் (Thar ROXX) காரை தற்போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையாகி வந்த மூன்று டோர் கொண்ட காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக, இந்த ஐந்து டோர் கொண்ட தார் ராக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தார் ராக்ஸ் அப்டேட்: மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) காரைப் பொறுத்தவரை, மஹிந்திரா தார் போன்று அல்லாது, இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் ஆகியவற்றில் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, இந்த காரின் முன் பக்கம் LED ஹெட் லைட் மற்றும் C வடிவ டிஆர்எல் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க கிரில் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பானட் பகுதி மட்டும் பழைய மஹிந்திரா தார் போலவே அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக, பின்பக்க சீட்டுகளுக்கு தனிக்கதவுகள் வழங்கப்பட்டு, ஐந்து டோர் கொண்ட தாராக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

வேரியண்ட்கள் மற்றும் நிறங்கள்: புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் MX1, MX3, MX5, AX3L, AX5L, AX7L என 6 வேரியண்ட்களில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், மேனுவல் டிரான்மிஷன், பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின், 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய அம்சங்களுடன் விதவிதமான காம்பினேஷன்களில், ஸ்டெல்த் பிளாக் (Stealth Black), டீப் ஃபாரஸ்ட் (Deep Forest), பெர்ன்ட் சியன்னா (Burnt Sienna), நெபியூலா ப்ளூ (Nebula Blue), டாங்கோ ரெட் (Tango Red), பேட்டில்ஷிப் கிரே (Battleship Grey), எவரெஸ்ட் வொய்ட் (Everest White) என ஏழு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் ராக்ஸ் MX1: தார் ராக்ஸ் மாடலில் குறைவான விலை கொண்ட பேஸ் வேரியண்ட் இந்த தார் ராக்ஸ் MX1 தான். இந்த பேஸ் வேரியண்டில், LED லைட்டிங், டூயல்-டோன் வெளிப்புற நிறம், 18-இன்ச் ஸ்டீல் வீல்கள், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், டிரைவர் டீச் ஹீட் அட்ஜஸ்ட்மென்ட், 60:40 ஸ்பிளிட், ஃபோல்டிங் பின்பக்க சீட், பின்பக்க ஏசி வென்ட்கள், பின்பக்க USB C சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமல்லாது, இந்த வேரியண்டில் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், ESC, அனைத்து பயணிகளுக்கும் 3 பாயின்ட் சீட் பெல்ட் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேரியண்டானது 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு என்ஜின்களுடனும் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ரியர் வீல் டிரைவ் வசதியை மட்டுமே இந்த பேஸ் வேரியண்ட் கொண்டிருக்கிறது. விலையைப் பொறுத்தவரையில், MX1 பெட்ரோல் மேனுவல் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.12.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், MX1 டீசல் மேனுவல் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.13.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

மஹிந்திரா தார் ராக்ஸ் MX3: இந்த தார் ராக்ஸ் MX3 வேரியண்டில், MX1 வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளுடன் கூடுதலாக, ஸிம் மற்றும் ஸூம் ஆகிய இரண்டு டிரைவிங் மோடுகள், ஸ்னோ, சேண்டு மற்றும் மட் ஆகிய மூன்று டெரைன் மோடுகள், ரியர் கேமரா, ஹில் அஸன்ட் மற்றும் டிஸன்டு அசிஸ்ட், ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் சீட் ஆர்ம்ரெஸ்ட், ஆட்டோ டிம்மிங் IRVM, வயர்லெஸ் ஆண்டராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஸ்மார்ட்போன் சார்ஜிங் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

7 நிறங்களில் Mahindra Thar ROXX
7 நிறங்களில் Mahindra Thar ROXX (Credits - Mahindra Website)

இந்த MX3 வேரியண்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெட்ரோல் என்ஜினுடன் ஆட்டோடமேடிக் கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

தார் ராக்ஸ் MX3 பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.14.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், MX3 டீசல் மேனுவல் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.15.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், MX3 டீசல் ஆட்டோமேட்டிக் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.17.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

தார் ராக்ஸ் MX5 வேரியண்ட்: தார் ராக்ஸ் வேரியண்ட்களில் அதிக வசதிகளை கொண்டிருப்பது இந்த தார் ராக்ஸ் MX5 வேரியண்ட்தான். மேலும், இந்த வேரியண்டில் இருந்துதான் 4 வீல் டிரைவ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த MX5 வேரியண்டில் C வடிவ டிஆர்எல் லேம்ப்கள், LED ஃபாக் லைட்டுகள், 18 இன்ச் அலாய் வீல்கள், சிங்கிள் பேன் சன்ரூஃப், லெதர் சீட் மற்றும் ஸ்டீயரிங் கவர், ஆம்பியன்ட் லைட்டிங், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ ஹெட் லைட்டுகள் மற்றும் வைப்பர்கள், முன்பக்க பார்க்கிங் சென்சார் மற்றும் எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃபரன்ஷியன் ஆகிய பல்வேறு ப்ரீமியம் வசதிகளும் இந்த வேரியண்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வேரியண்டை பொறுத்தவரையில் பெட்ரோல், டீசல் என்ஜின் தேர்வுகளில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்புடன், 2 வீல் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய தேர்வுகள் என அனைத்து விதமான காம்பினேஷன்களிலும் விற்பனை செய்யப்படவுள்ளது.

MX5 பெட்ரோல் மேனுவல் 2வீல் டிரைவ் ரூ.16.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், MX5 டீசல் மேனுவல் 2வீல் டிரைவ் ரூ.16.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகியிருக்கிறது. மேலும், MX5 பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 2 வீல் டிரைவ் ரூ.17.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், MX5 டீசல் ஆட்டோமேட்டிக் 2வீல் டிரைவ் ரூ.18.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இந்த வேரியண்டின் டாப் மாடலான MX5 டீசல் மேனுவல் 4 வீல் டிரைவின் விலையானது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

AX3L வேரியண்ட்: AX3L வேரியண்டில், MX1 மற்றும் MX3 வேரியண்ட்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளுடன் கூடுதலாக, ADAS பாதுகாப்பு வசதிகள், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேரியண்டானது டீசல் என்ஜினுடன், மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டு, 2 வீல் டிரைவ் அம்சங்களுடன் ரூ.16.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

தார் ராக்ஸ் AX5L: AX5L வேரியண்டில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பனேரமிக் சன்ரூஃப், 19 இன்ச் அலாய் வீல்கள், 6 டைப் அட்ஜஸ்ட்டபுல் டிரைவர் சீட், முன்பக்க வெண்டிலேட் சீட்கள், கூல்டு கிளவ் பாக்ஸ், 360 டிகிரி கேமரா, பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங், பவர் ஃபோல்டிங் ORVM, 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், இந்த வேரியண்டில் டீசல் என்ஜினுடன் கூடிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடைய 2 வீல் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய இரண்டு அம்சங்களுடன் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த AX5L வேரியண்டில் டீசல் ஆட்டோமேட்டிக் 2 வீல் டிரைவானது ரூ.18.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது. ஆனால், AX5L டீசல் ஆட்டோமேட்டிக் 4 வீல் டிரைவ் வேரியண்டின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

AX7L வேரியண்ட்: தார் ராக்ஸ் காரின் டாப் வேரியண்டாக AX7L உள்ளது. மற்ற வேரியண்ட்களில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளுடன் கூடுதலாக, இந்த AX7L வேரியண்டில் நாம் ஆக்ஸிலரேட்டர் கொடுக்காமலேயே காரை மணிக்கு 2.5 கிமீ முதல் 30 கிமீ வரையிலான வேகத்தில் இயங்க வைக்கும் 'ஸ்மார்ச் க்ராஸ்' வசதி, கார் மணிக்கு 15 கிமீக்கும் உள்ளான வேகத்தில் செல்லும் போது மிகவும் குறுகலான திருப்பங்களில் உட்புற வீல்களை லாக் செய்து எளிதாக திரும்ப உதவும் 'இன்டெல்லிடர்ன்' ஆகிய ஸ்மார்ட் வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்மார்ட் வசதிகளுடன் விற்பனை செய்யப்படவிருக்கும் தார் ராக்ஸ் காரின் ஒரே வேரியண்ட் AX7L மட்டும்தான்.

இதுமட்டும் அல்லாது, AX7L வேரியண்டின் டீசல் என்ஜினுடன் கூடிய மேனுவல் 2 வீல் டிரைவ் ரூ.18.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், பெட்ரோல் என்ஜினுடன் கூடிய ஆட்டோமேட்டிக் 2 வீல் டிரைவ் ரூ.19.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டீசல் என்ஜினுடன் கூடிய ஆட்டோமேட்டிக் 2 வீல் டிரைவ் ரூ.20.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியாகியிருக்கிறது. ஆனால் AX7L டீசல் என்ஜினுடன் கூடிய மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு 4 வீல் டிரைவ் வேரியண்ட்களின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆட்டோமேட்டிக் நகராக மாறப்போகும் சீனாவின் வுஹான் நகர்.. ஆதிக்கம் பெறும் ரோபோ டாக்ஸிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.