ETV Bharat / technology

இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி - மலிவு விலையில் மடிக்கக்கூடிய போன்! - INFINIX ZERO FLIP

இன்பினிக்ஸ், தங்களின் மலிவு விலை மடிக்கக்கூடிய ஜீரோ பிளிப் 5ஜி (Infinix Zero Flip 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Infinix zero Flip launch
இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. (Infinix)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 17, 2024, 4:31 PM IST

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி (Infinix Zero Flip 5G) மொபைலை, இன்று அறிமுகம் செய்தது. சாம்சங், மோட்டோரோலா, ஒப்போ போன்ற பிரபல நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில், இன்பினிக்ஸ் தனது மாடலை மலிவு விலையில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப் சந்தைக்குள் கால்வைத்துள்ள இன்பினிக்ஸ், பிரபல நிறுவனங்களுடனானப் போட்டியைத் தக்குப்பிடிக்குமா என்பதை அதன் அம்சங்கள் வைத்து தெரிந்துகொள்ளலாம். அதன்படி, இதன் இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி போனின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பிரமாண்ட திரை:

Infinix zero Flip violet garden color
இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி வயலெட் கார்டன் நிறம் (Infinix)

இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி போனின் உட்புறத்தில் 6.9-அங்குல (இன்ச்) முழு அளவு எச்டி+ எல்டிபிஓ (Full-HD+ LTPO) அமோலெட் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இது 120Hz ரெஃபிரெஷ் ரேட்டையும், 360Hz டச் சாம்பிளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. வெளிப்புறத்தில், 3.64-அங்குல அமோலெட் கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது.

சக்தி வாய்ந்த சிப்செட்:

Infinix zero Flip [rocessor
இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி சிப்செட் (Infinix)

ஜீரோ பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 (MediaTek Dimensity 8200) சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது 8ஜிபி LPDDR4X ரேமுடன், 512ஜிபி UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும், கூகுள் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் கட்டமைப்பட்ட ஸ்கின் XOS 14 பல AI (Gemini Folax) அம்சங்களை வழங்குகிறது. இதில் கூடுதல் மெமரி கார்டு வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமரா அமைப்பு:

Infinix zero Flip camera
இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி கேமரா (Infinix)

மொபைலின் வெளிப்புறத்தில் இரண்டு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மை கேமரா ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50 மெகாபிக்சல் திறன் கொண்டதாக உள்ளது. மற்றொன்று 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் உடன் வருகிறது. இது 114-டிகிரி காட்சி கோணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் உதவியுடன் 4K/30fps வீடியோக்களை பதிவு செய்ய முடியும். உள்புற திரையின் பஞ்ச் ஹோலில், 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 4K/60fps வீடியோ பதிவுத் திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க
  1. சைபர் கிரிமினல்களுக்கு இணையத்தில் பொறி; தேடிப்பிடிக்கும் தமிழ்நாடு சைபர் காவல்துறை!
  2. நானோ கார்: மோடியின் ஒரு ரூபாய் மெசேஜ்; ரத்தன் டாடாவின் ரூ.2,000 கோடி முதலீடு!
  3. கவச் தொழில்நுட்பம்: சிறப்புகள் என்ன? கவரைப்பேட்டை ரயில் விபத்தைத் தடுத்திருக்க முடியுமா?

பிற அம்சங்கள்:

Infinix zero Flip battery
இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி பேட்டரி (Infinix)

இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி மொபைல், வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், NFC, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் உடன் வருகிறது. மேலும், இரண்டு ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், பவர் பட்டனில் கைரேகை ஸ்கேனர், 4,720mAh பேட்டரி, 70W அதிவேக சார்ஜிங் வசதி கொண்டது.

விலை:

ராக் பிளாக், வயலெட் கார்டென் ஆகிய இரு வண்ணத் தேர்வுகளைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜீரோ பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் ஒரே வகையான 8 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.49,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக எஸ்பிஐ வங்கி கடன் அட்டைகளைப் (SBI Credit Card) பயன்படுத்தி ஜீரோ பிளிப் 5ஜி போனை ரூ.44,999 எனும் சலுகை விலையில் வாங்கலாம்.

பல ஜாம்பவான்கள் களமாடும் இந்த பிளிப் ஸ்மார்ட்போன் சந்தையில் மலிவு விலையில் நுழைந்துள்ள இன்பினிக்ஸ், வெற்றி காணுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

etv bharat tamil nadu whatsapp channel link and QR Code
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.