ஹைதராபாத்: உயர்மதிப்புமயமாக்கல் போக்குக்கு (premiumisation trend) மத்தியில் செலவழிப்பு வருமானம் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டில் இந்தியாவில் ஆடம்பர ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வு ஒன்றில், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதிகள் இந்த 2024ஆம் ஆண்டினுடைய முதல் காலாண்டில் 20 சதவீதமும் மற்றும் இரண்டாம் காலாண்டில் 10 சதவீதமும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், சாம்சங் கேலக்ஸி ஃபோல்டபிள் மாடல் மற்றும் புதிய ஆப்பிள் ஐபோன் சீரிஸ் வருகையால் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதிகளின் பங்கு சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் இயக்குநர் தருண் பதக் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டில், லக்சூரி அல்லது சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் நாட்டில் 14 சதவீத வளர்ச்சியைக் கண்டது. 2022ஆம் ஆண்டில், இந்த வளர்ச்சி 96 சதவீதமாகவும், 2023ஆம் ஆண்டில் சற்று குறைந்து 53 சதவீதமாகவும் உயர்ந்தது.
சாம்சங் நிறுவனத்தை பொறுத்தவரையில் 2023ஆம் ஆண்டில் 52 சதவீத பங்குகளுடன் சூப்பர் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 46 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தை பிடித்தது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனத்தின் தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் துணை தலைவர் பிரபு ராம், "இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உயர்மதிப்புமயமாக்கலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நுகர்வோர் அதிகளவில் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். மேலும், அந்தவகை ஸ்மார்ட்போன்கள் சிறந்த ஸ்பெஷிபிகேஷன்கள் மற்றும் அம்சங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், லைஃப்ஸ்டையில் ஸ்டேட்மேண்ட்களையும் செயல்படுத்துகின்றன.
மேலும், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள அப்பர்-பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 80 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருப்பதை சந்தை நுண்ணறிவு சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில், சாம்சங் நிறுவனம் 25 சதவீத பங்குகளுடன் மதிப்பின் அடிப்படையில் சந்தையில் முன்னிலை வகித்தது, அதைத் தொடர்ந்து vivo மற்றும் Apple ஆகியவை உள்ளன.
மேலும், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 5G ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலைகள் குறைந்து வருவதால், இந்தியாவில் 5G ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகள் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் 77 சதவீத பங்கை எட்டி சாதனைபடைத்துள்ளது" என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கடன் வாங்கினால் கழுத்தை நெரிக்கும் செயலிகள்.. தப்ப முடியுமா? வழி என்ன?