ETV Bharat / technology

செயலிழந்த ஜிமெயில் அக்கவுண்ட்: செப்.20 தான் கடைசி நாள்... உடனடியா இத பண்ணா; உங்க கூகுள் கணக்க காப்பாத்தலாம்! - Stop Google Account from Deleting - STOP GOOGLE ACCOUNT FROM DELETING

How to save my Gmail account: உங்கள் முக்கியமான ஜிமெயில் கணக்கைப் பாதுகாக்க வேண்டிய நேரமிது. இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பயன்படுத்தாமல் செயலிழந்த இருக்கும் கூகுள் கணக்குகளை (Google account) நிறுவனம் அழிக்கத் திட்டமிட்டுள்ளது. அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

google deleting gmail account news thumbnail
செயலிழந்திருக்கும் ஜிமெயில் கணக்குகள் செப்டம்பர் 20-ஆம் தேதிக்குப் பிறகு அழிக்க முடிவுசெய்துள்ள கூகுள் (Credits: Etv Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 18, 2024, 5:12 PM IST

உங்கள் ஜிமெயில் கணக்கை (Gmail Account) சமீபத்தில் எப்போது திறந்து பார்த்தீர்கள் என்று ஞாபகம் இருக்கா? சில ஆண்டுகளாக நீங்கள் இதை செய்யவில்லை என்றால், உங்கள் கணக்கை அழிக்க கூகுள் தயாராகி வருகிறது. இன்னும் புரியவில்லை என்றால், கூகுளின் புதிய நடைமுறை கொள்கை மாற்றங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், 2 வருடங்களுக்கு மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை அழிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதனால், அந்த கணக்கில் நீங்கள் சேகரித்து வைத்திக்கும், தரவுகள், புகைப்படங்கள், காணொளிகள், தொர்பு எண்கள் என அனைத்தும் பயனற்றதாகிவிடும். இதற்காக கூகுள் 'செயலற்ற கணக்குகளுக்கான கொள்கை'யை (Inactive Account Policy) நிறுவனம் வகுத்துள்ளது. எனவே பயப்பட வேண்டாம்; உடனடியாக சிலவற்றை நீங்கள் செய்தால், உங்கள் கூகுள் கணக்கைப் பாதுகாக்கலாம். இல்லையென்றால், செப்டம்பர் 20-ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் கணக்கு அழிக்கப்பட்டுவிடும்.

கூகுள் கணக்கைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? (How to save your Google Account)

பயன்படுத்தப்படாமல் செயலிழந்திருக்கும் கணக்குகள் தான் சைபர் தாக்குதல்களுக்கு பெரிதும் உள்ளாவதாக கூகுள் நம்புகிறது. இதனால் தான் புதிய பாதுகாப்பு அப்டேட்டுகளை பின்பற்றாத கணக்குகளை அழிக்க கூகுள் திட்ட வகுத்தது. எனவே, ஜிமெயில் அக்கவுண்ட் வாயிலாக நீங்கள் அணுகும் கூகுள் கணக்கை காப்பாற்ற கீழ்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.

இதையும் படிங்க: ஜீரோ 40 5ஜி: ஐபோன் iOS 18-க்கு போட்டி நாங்கதான்; IR ரிமோட், JBL ஸ்பீக்கர்ஸ், Folax அசிஸ்டன்ட் என பல அம்சங்கள்! - Infinix Zero 40 5G AI Phone

உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்து (Google Account Login) கணக்குகளை சரிபார்ப்பது தான் முதல் தீர்வு. இப்படி செய்தாலே உங்கள் கணக்கு பயன்பாட்டில் இருப்பதாகக் கூகுள் புரிந்துகொள்ளும். வேறு என்னென்ன செய்தால் உங்கள் கூகுள் கணக்கை செயல்பாட்டில் (How to keep Google Account active) வைத்திருக்கலாம்.

  • மின்னஞ்சல் அனுப்புவது அல்லது படிப்பது.
  • கூகுள் டிரைவ் பயன்படுத்துவது.
  • சம்பந்தப்பட்ட கணக்கின் வாயிலாக யூடியூப் பார்ப்பது.
  • புகைப்படம் பகிர்வது.
  • கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது.
  • கூகுள் தேடுபொறியைப் (Google Search) பயன்படுத்துவது.
  • சம்பந்தப்பட்ட கூகுள் கணக்கின் வாயிலாக மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்குள் உள்நுழைவது.

மேற்கூறப்பட்ட அனைத்து செயல்பாடுகளையும் கூகுள் கண்காணிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, உங்கள் கணக்கு செயல்பாட்டில் இருப்பதாக கூகுள் முடிவு செய்கிறது. எனவே, மேற்கூறப்பட்ட எதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் கணக்கைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Google Inactive Account Policy Image
கூகுள் 'செயலற்ற கணக்குகளுக்கான கொள்கை' (Credits: Google)

கூகுளின் செயலற்றக் கணக்குகளுக்கான கொள்கை:

நீங்கள் உங்கள் கூகுள் கணக்கை 2 ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால், கூகுளின் 'செயலற்றக் கணக்குகளுக்கான கொள்கை'யின் படி அது செயலற்றதாகக் கருதப்படும். அதன் பின்னர் அதில் உள்ள உள்ளடக்கங்களும், தரவுகளும் நீக்கப்படலாம். இதற்கு முன், சில நடவடிக்கைகளை கூகுள் மேற்கொள்ளும்.

இதையும் படிங்க: ஜிபிஎஸ் முதல் AI வரை: கால்பந்து அனுபவத்தை வேற லெவலாக்கும் புதுமையான டெக்னாலஜிகள்! - TECHNOLOGY USED IN FOOTBALL

அதாவது 2 ஆண்டுகளை நெருங்கி பயனற்றிருக்கும் உங்கள் கூகுள் கணக்குக்கு மின்னஞ்சல் வாயிலாக இதுதொடர்பான அறிவிப்புகளும், மீட்பு மின்னஞ்சல் (Recovery Email / Secondary Email) முகவரிக்கு அறிவிப்புகளும் அனுப்பப்படும். அதன்பின்னரும் உங்கள் கணக்கு செயலிழந்திருந்தால், கணக்கை அழிக்க கூகுளுக்கு முழு அனுமதி உள்ளதாக கூகுளின் செயலற்றக் கணக்குகளுக்கான கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.