ETV Bharat / technology

தீபாவளி பரிசு கொடுக்க காத்திருந்தாங்க போல! அக்டோபர் 2024 வெளியாகும் டாப் கிளாஸ் மொபைல்கள்! - Upcoming Mobiles October 2024 - UPCOMING MOBILES OCTOBER 2024

அக்டோபர் மாதம் வெளியாகும் மொபைல்களின் (Upcoming Mobiles October 2024) பட்டியல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ், சியோமி, ஒப்போ, விவோ என பலச் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பண்டிகைக் காலத்தை சிறப்பிக்கத் தயாராகியுள்ளன.

list of mobiles that launch in october 2024
அக்டோபர் 2024 வெளியாகக் காத்திருக்கும் மொபைல்களின் பட்டியலைக் காணலாம். (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 2, 2024, 7:43 PM IST

தசரா, தீபாவளி ஆகிய பண்டிகைகள் நெருங்கும் வேளையில், டெக் நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 2024, சியோமி 15 சீரிஸ், ஒன்பிளஸ் 13, விவோ எக்ஸ்200, ஒப்போ ஃபைண்டு எக்ஸ்8 போன்ற பிரபல சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இம்மாதத்தில் வெளியாகிறது.

அப்படி வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல், அவை வெளியாகும் தேதி, அதன் அம்சங்கள் என்ன என்பது போன்ற தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

  • சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் (Samsung Galaxy S24 FE):

செப்டம்பர் மாதம் வெளியான புதிய சாம்சங் கேலக்சி எஸ்24 ஃபேன்ஸ் எடிஷன் மொபைல் நாளை (அக்டோபர் 3) விற்பனைக்கு வருகிறது. 6.7-அங்குல முழு எச்டி+ டைனமிக் அமோலெட் 2x டிஸ்ப்ளே, 120 Hz ரெப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ், 4 nm சாம்சங் டெக்கா-கோர் எக்சினாஸ் 2400e சிப்செட், 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் OIS உடன், 8 மெகாபிக்சல் 3x டெலிஃபோட்டோ சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் அடங்கிய பின்பக்க கேமரா, 10 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 8 ஜிபி ரேம் / 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆகிய சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. அறிமுகச் சலுகையாக சாம்சங் கேலக்சி எஸ்24 FE போனின் 128 ஜிபி மாடலின் ரூ.59,999 எனும் விலைக்கே, 256 ஜிபி வேரியன்டை பயனர்கள் வாங்கலாம்.

Lava Agni 3
லாவா அக்னி 3 மொபைல். (Lava India)
  • லாவா அக்னி 3 (Lava Agni 3):

சீனத் தயாரிப்புகளுடன் உள்நாட்டின் லாவா நிறுவனம் புதிய லாவா அக்னி 3 மொபைல் அக்டோபர் 4, 2024 அன்று அறிமுகம் செய்கிறது. இதில் 6.78-அங்குல அமோலெட் திரை 120 Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் இருக்கும். மேலும், CMF போன் 1, மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன்களில் உள்ள மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் இதில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆகியவை இதன் அம்சங்களில் அடங்கும். கேமராவைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொடுக்கப்படலாம்.

  • விவோ எக்ஸ் 200 (Vivo X200 Series):

அக்டோபர் 14, 2024 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும் விவோ எக்ஸ் 200 சீரிஸ் ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் சந்தைக்குக் கொண்டுவரப்படுகிறது. அதில் விவோ எக்ஸ் 200, விவோ எக்ஸ் 200 ப்ரோ, விவோ எக்ஸ் 200 ப்ரோ மினி ஆகிய மாடல்கள் அடங்கும். இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் பயன்படுத்தப்பட உள்ளது. மிக முக்கியமாக, Zeiss கேமரா அமைப்பு இதில் நிறுவப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா மொபைலாக டெக் சந்தையில் வலம்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo X200 Series
விவோ எக்ஸ் 200 மொபைல். (Han Boxiao / Weibo)
  • சியோமி 15 சீரிஸ் (Xiaomi 15 Series):

சீனாவின் அக்டோபர் 23ஆம் தேதி சியோமி 15 சீரிஸ் மொபைல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதில் சியோமி 15, சியோமி 15 ப்ரோ ஆகிய இரு மாடல்கள் அடங்கலாம். இரண்டு போன்களிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் கொடுக்கப்படலாம். மேக்னெட்டிக் சார்ஜிங், லெய்கா கேமரா, ஐபி69 நீர் பாதுகாப்பு போன்ற பல அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும்.

Xiaomi 15 Series
எதிர்பார்க்கபப்டும் சியோமி 15 சீரிஸ். (Xiaomi)
  • ஒன்பிளஸ் 13 (OnePlus 13):

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஃபிளாக்‌ஷிப் மாடலான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன், சீனாவில் இம்மாதம் வெளியாவது உறுதியாகியுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட், 6,000 mAh பேட்டரி, 100W வேகமான சார்ஜிங் திறன், ஐபி69 ரேட்டிங் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus 13
எதிர்பார்க்கபப்டும் ஒன்பிளஸ் 13 மொபைல். (OnePlus)
  • இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் (Infinix Zero Flip):

சமீபத்தில் ஜீரோ 40 ஸ்மார்ட்போனை இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது, இந்த மாதத்தில் இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் போனை, 6.9-அங்குல எல்டிபிஓ அமோலெட் திரை, முகப்பில் 3.64 அமோலெட் திரை, மீடியாடெக் டிமென்சிட்டி 8020 சிப்செட், 8 ஜிபி வரை ரேம், 512 ஜிபி வரை ஸ்டோரேஜ், இரண்டு 50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா ஆகிய அம்சங்களுடன் அறிமுகம் செய்கிறது.

Infinix Zero Flip
இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் போன். (Youtube / Infinix)
  • ஒப்போ ஃபைண்டு எக்ஸ் 8 (Oppo Find X8):

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபைண்டு எக்ஸ் 8 வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அக்டோபர் இறுதியில் சந்தைக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கொடுக்கப்படும் ஹெசல்பிளேட் கேமரா அமைப்பு (Hasselblad-tuned camera system) இதன் பிரதான அம்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Oppo Find X8
ஒப்போ ஃபைண்டு எக்ஸ் 8 ஸ்மார்ட்போன். (91 Mobiles)
இதையும் படிங்க
  1. சைலன்டா சம்பவம் செய்த ஜியோ: வெறும் ரூ.3 போதும்; இலவச கால்கள், டேட்டா!
  2. விலை குறையும் மின்சார வாகனங்கள்! - PM E DRIVE scheme
  3. டாடா நெக்சான் சிஎன்ஜி, மாருதி ஸ்விஃப்ட் காருக்கு போட்டியா? டர்போ எஞ்சினுடன் ரூ.8.99 லட்சதிற்கு அறிமுகம்!

மேற்கூறப்பட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களும் இம்மாதத்தில் வெளியாகும் நிலையில், டெக் சந்தையில் தற்போது விற்பனையில் இருக்கும் ஆப்பிள் ஐபோன், மோட்டோரோலா, கூகுள் பிக்சல், சாம்சங் போன்களுக்கு இவை கடுமையானப் போட்டியைக் கொடுக்கலாம்.

etv bharat tamil nadu whatsapp channel link
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.