இந்தியாவின் முதன்மையான மின்சார பைக் தயாரிப்பு நிறுவனமாக ஓலா (OLA) இருந்துவருகிறது. இந்நிலையில், இவர்களது வாடகை சவாரி சேவை வழங்கும் நிறுவனமான ஓலாவுக்கு எதிராக ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓலா தனது வாடிக்கையாளர்களுக்கு, பணத்தைத் திருப்பிச் செலுத்தும் முறையில் வெளிப்படைத்தன்மையையும், அதை எவ்வாறு அவர்கள் பெறவேண்டும் என்பதைத் தேர்வு செய்யும் உரிமையையும் வழங்க வேண்டும் என ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமான CCPA உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஓலா நிறுவனத்திற்கு போதாத காலம் என்றே சொல்லலாம். அவர்களின் மின்சார ஸ்கூட்டர்கள் பல இடங்களில் பழுதாகி நிற்பதும், சில இடங்களில் முற்றிலும் எரிந்து நாசமாவது என பல இடையூறுகளை நிறுவனம் சந்தித்துவருகிறது.
மேலும், வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாமல், ஓலா அலைக்கழிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், இதன் வாடகை சவாரி சேவை வழங்கும் தாய் நிறுவனத்திற்கு, அரசு தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பணத்தைத் திருப்பிச் செலுத்தும் முறையில் (Refund) நுகர்வோருக்கு அதிகாரம்:
ஓலாவின் "கேள்வி கேட்கப்படாத" பணத்தைத் திருப்பிச் செலுத்தும் கொள்கையின் கீழ், முன்பு பெரும்பாலும் கூப்பன் குறியீடுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இது நுகர்வோரின் உரிமைகளை மீறுவதாகக் கருதிய CCPA, ஓலா நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அல்லது கூப்பன் மூலம் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் தெளிவான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோ சவாரி பில்லிங்கில் வெளிப்படைத்தன்மை:
ஓலா தனது தளத்தின் வாயிலாக பதிவு செய்யப்பட்ட ஆட்டோ சவாரிகளுக்கு பில்கள் அல்லது ரசீதுகளை வழங்கவில்லை என்பதையும் CCPA கண்டறிந்துள்ளது. இந்த நடைமுறை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் கீழ் "நியாயமற்ற வர்த்தக நடைமுறை" என்று கருதப்படுகிறது. எனவே, அனைத்து ஆட்டோ சவாரிகளுக்கும் முறையான ரசீதுகளை வழங்க ஓலாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓலா தளததில் நுகர்வோர் சார்ந்த மாற்றங்கள்:
▪️ Central Consumer Protection Authority directs Ola to develop mechanism providing choice to consumers regarding refund mode
— PIB India (@PIB_India) October 13, 2024
▪️ Consumers may choose refund via Bank Account or Coupon in Grievance Redressal Process
▪️ Central Consumer Protection Authority’s intervention leads…
ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலையீட்டால் ஓலா செயலியில் வேறு சில நேர்மறையான மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. அவை என்ன என்பது கீழ்வருமாறு காணலாம்.
- புகார் மற்றும் முனைய அலுவலர் விவரங்கள் ஓலா தளத்தில் சேர்க்கப்பட்டது.
- ரத்துசெய்யும் கொள்கைகள் மற்றும் கட்டணங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஓட்டுநரின் ஆர்டர் ஏற்புத் திரையில், சவாரி பதிவு செய்பவர் ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடம் என இரண்டும் சேர்க்கபப்ட்டுள்ளது.
- சவாரி ரத்து செய்வதற்கான விரிவாக்கப்பட்ட காரணங்கள்
- மொத்த கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை
- ஓட்டுநர்களுடனான மேம்பட்ட தகவல் தொடர்பு
- டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக ஏசி பயன்பாட்டை ஊக்குவித்தல்.
- ஓட்டுநர்களுக்கான திருத்தப்பட்ட கட்டண முறைகள் காரணமாக ஓலா வேலட்டில் இருந்து விரைவாக பணம் பெறும் வசதிகள்.
நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்தல்:
தேசிய நுகர்வோர் உதவி எண் 1800114000 அல்லது 1915 (NCH) வாயிலாக ஓலாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஏராளமான புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் CCPA நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனவரி 1, 2024 முதல் அக்டோபர் 9, 2024 வரை, 2,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க |
நுகர்வோர் உரிமைகளுக்கான வெற்றி:
வாடகை சவாரித் துறையில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாக ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலையீடு பார்க்கப்படுகிறது.
ஓலா நிறுவனத்திடம் இருந்து அதிக வெளிப்படைத்தன்மை, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல், நேர்மையான நடைமுறைகளை வகுத்தல் போன்றவற்றால் நுகர்வோருக்கு நியாயமான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உறுதி செய்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.