ETV Bharat / state

பிரசாந்தை தொடர்ந்து இர்பானுக்கும் அபராதம்... சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி! - Irfan fined by chennai police

Irfan fined by chennai police: பிரபல யூடியூபர் இர்பான், சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக போக்குவரத்து காவல்துறை 1,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

யூடியூபர் இர்பான் புகைப்படம்
யூடியூபர் இர்பான் புகைப்படம் (Credits - Youtuber Irfan Instagram page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 3:44 PM IST

Updated : Aug 3, 2024, 5:01 PM IST

சென்னை: தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலின் போது, நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் தொகுப்பாளருடன் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, பிரசாந்த் மற்றும் தொகுப்பாளர் இருவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

நடிகர் பிரசாந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரசாந்த், “ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியதால் போலீசார் அபராதம் விதித்தனர் எனவும், ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இலவச ஹெல்மெட் வழங்கி வருவதாகவும்” தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதை மையப்படுத்தி, சென்னையில் பிரபல யூடியூபர் இர்பான் தலைக்கவசம் மற்றும் வாகன எண் இல்லாமல் பயணம் செய்திருந்தது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி விமர்சனங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, யூடியூபர் இர்ஃபானுக்கு தலைகவசம் அணியாமல் சென்றது மற்றும் வாகன எண் இல்லாமல் பயணித்ததற்காக 1,500 ரூபாய் விதித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் இர்பானுக்கு அபராதம் விதித்தது தொடர்பாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தனது அதிகாரப்பூர்வ X தளத்திலும் பதிவிட்டுள்ளது.

அதில் before என்று பதிவிட்டு, இர்ஃபான் தலைகவசம் மற்றும் வாகன எண் இல்லாத படமும், After என்று போடப்பட்டு வாகன எண் போடப்பட்ட வாகனமும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், தலைகவசம் அணியாமல் சென்றதற்கு 1,000 ரூபாய் அபராதமும், வாகன எண் இடம்பெறாததால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், Follow traffic rules, your safety is our priority என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இர்பான் தனக்கு பிறக்குப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது குறித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்குப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது குறித்து சர்ச்சையில் சிக்கினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஹெல்மெட் அணியாததால் ரூ.2 ஆயிரம் அபராதம் - நடிகர் பிரசாந்த் அளித்த விளக்கம் - ACTOR PRASANTH ABOUT HELMET ISSUE

Last Updated : Aug 3, 2024, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.