ETV Bharat / state

சென்னையில் 'பீடி' தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது! - Ambattur Murder - AMBATTUR MURDER

Ambattur Murder: சென்னை அருகே பீடி தர மறுத்த தந்தையை, கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பத்தூர் காவல் நிலையம்
அம்பத்தூர் காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 12:26 PM IST

சென்னை: சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டதாக அம்பத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் மகேந்திரனின் மகன் அருண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரது மகனே அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார் மகேந்திரனின் மகன் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மகேந்திரன் மகன் அருண் (28) தனது தந்தையிடம் பீடி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மகேந்திரன் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த அருண் வீட்டின் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டதில் இரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். இதனையடுத்து அருணை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை: குடும்பப் பிரச்சனையில் குற்றப் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.