ETV Bharat / state

மயிலாடுதுறையில் இளைஞர் வெட்டிக்கொலை.. பழிக்குப் பழி வாங்க நடந்த கொலையா? - MAYILADUTHURAI CRIME NEWS

Mayiladuthurai Murder Case: மயிலாடுதுறையில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இளைஞரை, மர்ம நபர்கள் சரமாரியாகத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Mayiladuthurai crime news
Mayiladuthurai crime news
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 10:49 AM IST

Updated : Mar 21, 2024, 4:57 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் அஜித்குமார்(26). கடந்த 2022ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் உள்ள கொத்த தெருவைச் சேர்ந்த முன்னாள் வன்னியர் சங்க நகரச் செயலாளரும், பாமக பிரமுகருமான கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அஜித்குமாரும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அஜித்குமார் நேற்று (மார்ச் 20) இரவு, மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தெற்கு வீதி பகுதியில் கலைஞர் காலனியைச் சேர்ந்த உறவினர் சுப்ரமணியன் மகன் சரவணனுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், இவர்களை வழி மறித்து ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அப்போது, தலையில் பலத்த காயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனிடையே உடனிருந்த சரவணன் கையில் வெட்டுக்காயங்களுடன் அருகிலிருந்த ஒரு வீட்டிற்குப் புகுந்து, பின் வாசல் வழியாகச் சென்று பதுங்கியுள்ளார். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனை மீட்ட மயிலாடுதுறை போலீசார், சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சரவணன் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இறந்த அஜித்குமாரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

அதில், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பாமக பிரமுக கண்ணன் கொலை வழக்கில், அஜித்குமார் சம்பந்தப்பட்டுள்ளதும், அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் நடக்காமல் தடுக்க அஜித்குமார் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் பல மாதங்களாக போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் கண்ணன் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க, ஜாமீனில் வெளி வந்த அஜித்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு இறந்த அஜித்குமாரின் உறவினர்கள் மருத்துவமனை அருகே மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போராட்டம் நடந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, பாமக பிரமுகர் ம.க. ஸ்டாலினின் தூண்டுதல் பேரில், இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாகவும், குற்றவாளிகள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனா பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதால், உடன்பாடு எட்டப்பட்டநிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்ட அஜித்குமாரின் உறவினர்கள் மருத்துவமனைக்குள் சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த புரட்சி பாரதம் கட்சியினர்...விழுப்புரத்தில் நடந்தது என்ன?

Last Updated : Mar 21, 2024, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.