அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர், சுப்ரமணியன் மகன் மணிகண்டன் (21). கூலி தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது உறவு முறையான ஒருவரின் 15 வயது மகளை கடந்த ஒரு வருடமாக மணிகண்டன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த சிறுமியிடம் திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, பல முறை பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதில் சிறுமி 4 மாத கர்ப்பம் தரித்துள்ளார். இந்த தகவல் தெரிந்து அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து போது கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மகளிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மணிகண்டனிடம், இது தொடர்பாக விசாரித்து உள்ளனர். சிறுமி கர்ப்பமாக உள்ளார் என்ற தகவலை அறிந்ததும் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்டனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. கடந்த 2 மாதங்களாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த மணிகண்டனை இன்று அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரியா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம்..2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை தற்கொலை!