ETV Bharat / state

குடி போதையில் சாலையோரம் படுத்திருந்தவர் மீது தாக்குதல்.. 6 பேர் கைது! - youngsters arrested at chennai - YOUNGSTERS ARRESTED AT CHENNAI

Six youngsters arrested on murder issue: குன்றத்தூர் அருகே சாலையோரம் படுத்திருந்த நபர் மீது, குடிபோதையில் வந்த நண்பர்கள் தகராறில் ஈடுபட்டு கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.

கொலை செய்யப்பட்டவர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படம்
கொலை செய்யப்பட்டவர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 5:50 PM IST

சென்னை: குடிபோதையில் சாலையோரம் படுத்திருந்த நபரை கட்டையால் தாக்கி கொலை செய்த நண்பர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குன்றத்தூர் அடுத்த சின்னபனிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (35). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (மே 10) இரவு இவர் சாலையோரம் படுத்திருந்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்த கோவூரைச் சேர்ந்த கணேஷ் (35) என்பவர், யுவராஜ் படுத்திருப்பதை பார்த்து, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, குடி போதையில் அப்பகுதிக்கு வந்த கணேஷின் நண்பர்கள் சிலர் யுவராஜை சரமாரியாக கல்லாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் ரோந்துப் பணியில் இருந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு யுவராஜ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாங்காடு போலீசார், கணேசனை கைது செய்து இந்தச் சம்பவத்தில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரித்துள்ளனர்.

இந்த விசாரணைக்குப் பின் கணேசனின் நண்பர்களான கோவூரைச் சேர்ந்த தினேஷ் கொடி (34), சரன்ராஜ் (24), பிரவீன்குமார் (23), வசந்த் (25), சிலம்பரசன் (24) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாலையோரம் படுத்திருந்தவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ள சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொலை முயற்சி வழக்கில் பாஜக மாவட்டத் தலைவர் கைது.. 9 பேரை தேடும் போலீசார்! - Tiruvarur Bjp Leader Arrest

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.