ETV Bharat / state

சென்னை சாலைகளில் 'ஹார்ட்டின்' வடிவில் ஒளிரும் டிராஃபிக் சிக்னல்கள்! ஆகஸ்ட் 5 ஆம் நாளுக்கு அப்படி என்ன சிறப்பு? - International Traffic Signal Day

International Traffic Signal Day : உலக டிராபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மாநகர சாலைகளில் 'ஹார்ட்டின்' வடிவில் சிக்னல்களை ஒளிர செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை அண்ணா சாலையில் ஹார்ட்டின் வடிவில் ஒளிரும் சிக்னல்
சென்னை அண்ணா சாலையில் ஹார்ட்டின் வடிவில் ஒளிரும் சிக்னல் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 4:23 PM IST

சென்னை: சென்னையின் பிரதான பகுதிகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட சாலைகளில், உலக டிராபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு ஹார்ட்டின் வடிவிலான சிக்னலை சென்னை போக்குவரத்து காவல் துறை இன்று ஒளிரவிட்டுள்ளது.

சாலைப் பயணத்தின்போது பாதுகாப்பு தரும் போக்குவரத்து விளக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தாலே பல விபத்துகள் தடுக்கப்படும் என்பதால் முதன் முதலில் இந்த போக்குவரத்துக்கான எச்சரிக்கை ஒளி விளக்குகளை அறிமுகப்படுத்தியவர் ஜேம்ஸ் .

1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று, அமெரிக்க நகரான ஓஹியோ கிளீவ்லேண்டில் உள்ள யூக்ளிட் அவென்யூவில் ஜேம்சால் பொருத்தப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் சிக்னல் தான் முதல் போக்குவரத்து சிக்னலாக கருதப்படுகிறது. இந்த மின்சார டிராபிக் விளக்குகள் மனிதரின் கைகளால் இயக்கும் வண்ணம் அப்போது இருந்தது.

இந்நிலையில் அதுவே, காலங்கள் மாற மாற ஆட்டோமேடிக்காக இயங்கும் விளக்குகள் தற்போது சிக்னல் எனும் பெயரில் சாலைக் கம்பங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் முதன் முதலில், ஜேம்சால் பொருத்தப் பட்ட டிராபிக் விளக்குகளை நினைவுகூறும் வகையில், இந்த தினமே (ஆகஸ்ட் 5) சர்வதேச போக்குவரத்து விளக்குகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்.. திருவண்ணாமலையில் நூதன வழிபாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.