வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடு அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில், இளம்பெண் கடந்த சில காலமாக கருத்துவேறுபாடு காரணமாக கதிர்வேலிடம் இருந்து விலகியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கதிர்வேலை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று சட்ட வழிமுறைகளை செய்யத் காத்திருந்த போது வாணியம்பாடி கிராமிய காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை தள்ளிவிட்ட கதிர்வேல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
பின்னர், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) தலைமையிலான போலீசார் குற்றவாளி கதிர்வேலை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் தலைவரானார் ராதாரவி.. தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல் முடிவு வெளியானது!