ETV Bharat / state

'1000 ரூபாய்க்கு 1 கிராம் தங்கமாம்'.. சதுரங்க வேட்டையில் சிக்கிய பொதுமக்கள்.. கோடிகளை சுருட்டிய மோசடி பெண் கைது! - fake gold investment - FAKE GOLD INVESTMENT

ranipet fraud woman: ராணிப்பேட்டை அருகே தங்கம் கிராமுக்கு ரூ.1000 மலிவு விலையில் வழங்கப்படும் என்று கூறி பலரிடம் கோடி கணக்கில் பணத்தை வசூல் செய்து விட்டு மோசடியில் ஈடுபட்ட பெண்ணை ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சசிகலா
கைது செய்யப்பட்ட சசிகலா (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 12:51 PM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, மாந்தாங்கல் அடுத்த காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் ஈரோட்டில் உள்ள பிரபல ஏஜென்சியான ஸ்ரீ பாலாஜி மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தின் மூலம் தங்கம் கிராமுக்கு ரூ.1000 விலை மலிவாக கொடுப்பதாக கவர்ச்சிகரமான திட்டத்தை பற்றி பொதுமக்களிடம் கூறி விளம்பரம் செய்துள்ளார்.

மேலும், பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என சொல்லி ஆசையை தூண்டியுள்ளார். அதன்படி, முதலில் சிலரிடம் வாங்கிய சிறிய தொகைகளுக்கு உரிய தங்க நாணயங்களையும் வழங்கியுள்ளார். இதனை நம்பி கூலி வேலை செய்வோர், வியாபாரிகள், என பலரும் தங்களது சேமிப்பை முதலீடு செய்துள்ளனர்.

மேலும், முதலீடு செய்தவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த திட்டத்தை கூறி ஏஜெண்ட் போல செயல்பட்டு அவர்களிடமிருந்து பணம் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பு சசிகலா, கொடுத்த பணத்திற்கு தங்கத்தை வழங்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

பணத்தை கட்டிய பலரும் தங்களுக்கு சேர வேண்டிய தங்கத்தை கேட்ட போது, சசிகலா உரிய பதில் கூறாமல் மிரட்டும் தோணியில் பேசியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் 30க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதியன்று புகார் அளித்தனர்.

குறிப்பாக அம்மூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவரிடமிருந்து மட்டும் 1.16 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அவர் கொடுத்த புகாரின் பேரில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் மீது ராணிப்பேட்டை போலீசார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணம் கட்டி ஏமாந்த சிலர் மீண்டும் புகார் அளித்த நிலையில், தலைமறைவாக இருந்த சசிகலாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும், வழக்கில் தொடர்புடையை சசிகலாவின் உறவினர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓய்வு பெறும் நாளில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை திடீர் சஸ்பெண்ட்.. யார் இந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.