ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவன்; காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மனைவி! - Illegal Relationship Murder - ILLEGAL RELATIONSHIP MURDER

Illegal Relationship Murder Case In Theni: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னமனூர் காவல் நிலையம், கைது செய்யப்பட்ட பூங்கொடி
சின்னமனூர் காவல் நிலையம், கைது செய்யப்பட்ட பூங்கொடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 3:41 PM IST

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த குச்சனூர்-சங்கராபுரம் இணைப்புச்சாலை அருகே, வனப்பகுதியில் கடந்த 6ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர் போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உப்புக்கோட்டையை அடுத்த மாணிக்காபுரத்தைச் சேர்ந்த சென்றாயன் (39) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக, இந்த கொலை தொடர்பாக சென்றாயன் மனைவி பூங்கொடி (33) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "சென்றாயன் பந்தல் போடும் கூலி வேலை செய்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர் தினசரி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் குடித்துவிட்டு தனது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் புகுந்து பாத்திரங்களை அடித்து நொறுக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் போலீசார் சென்றாயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 4ஆம் தேதி சிறையிலிருந்து வீட்டுக்கு வந்த சென்றாயன், வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு குச்சனூர்-சங்கராபுரம் இணைப்புச் சாலையில் தனியார் தென்னந்தோப்பில் வசித்து வரும் தனது மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: சாதியை சொல்லி திட்டிய கூட்டுறவு சங்க அதிகாரி?.. அலைக்கழித்த போலீசுக்கு வந்த உத்தரவு - தூத்துக்குடியில் நடப்பது என்ன?

அங்கு மனைவியுடன், மாணிக்காபுரத்தை சேர்ந்த உறவினர் ராஜபிரபு (23) என்பவர் இருந்துள்ளார். ஏற்கனவே மனைவி மீது சந்தேகத்தில் இருந்த சென்றாயன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அவரை சமாதானம் செய்த மனைவி ஊருக்கு செல்லலாம் என கூறி கணவன், மனைவி மற்றும் ராஜபிரபு ஆகியோர் ஒரே டூவீலரில் சென்றுள்ளனர்.

அப்போது, செல்லும் வழியில் குச்சனூர் இணைப்புச்சாலை அருகே வனப்பகுதிக்குள் சென்றாயனை அழைத்துச் சென்று அங்கு ராஜபிரபு மற்றும் பூங்கொடி சேர்ந்து 23 இடங்களில் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

மேலும், திருப்பூரில் வேலை பார்க்கும் ராஜபிரபு 10 நாட்களுக்கு ஒருமுறை மாணிக்காபுரத்துக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் பூங்கொடிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. கணவன் சிறைக்கு சென்றபின் திருப்பூருக்குச் சென்று ராஜபிரபுடன் பூங்கொடி வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர்களுக்கு இடையூறாக இருந்த சென்றாயனை கொல்ல முடிவு செய்து, இருவரும் சம்பவம் நடந்த முதல் நாள் திருப்பூரில் இருந்து திரும்பி வந்துள்ளனர். தற்போது ராஜபிரபுவையும், பூங்கொடியையும் கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.