ETV Bharat / state

கணவர் சொத்துக்காகப் போடப்பட்ட பாகப்பிரிவினை வழக்கு தள்ளுபடி: நீதிமன்ற வளாகத்தில் மனைவி தற்கொலை! - woman suicide at court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 10:32 PM IST

Woman suicide at court: தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் கணவரின் சொத்துக்காகப் போடப்பட்ட பாகப்பிரிவினை வழக்கு தள்ளுபடியானதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவர் சொத்துக்காக போடப்பட்ட பாகப்பிரிவினை வழக்கு தள்ளுபடி

திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த வாரபாளையம் தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர் சுயமாகச் சம்பாதித்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலம் தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ளது. இறந்து போன ராமசாமிக்கு கோவிந்தம்மாள்(60) என்ற மனைவியும், சதீஷ்குமார் (30) என்ற மகனும், பிரியா(27) என்ற மகளும் உள்ளனர்.

ராமசாமியின் இறப்புக்குப் பின் அவருக்குச் சொந்தமான 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு அவரது மனைவி கோவிந்தம்மாள், மகன் சதீஷ்குமார், மற்றும் மகள் பிரியா ஆகியோர் வாரிசு தாரர்களாக உள்ளனர்.

இந்நிலையில் சொத்து சம்பந்தமாகத் தாயார் கோவிந்தம்மாளுக்கும், மகன் சதீஷ்குமாருக்கும் தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை குறித்த வழக்கு சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணையின் போது கோவிந்தம்மாள் முறையாக விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காததால் கடந்த 3ஆம் தேதி கோவிந்தம்மாள் தொடர்ந்த பாகப்பிரிவினை வழக்கு தள்ளுபடி ஆனது.

இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட மனைவி நேரடி வாரிசாகத் தான் இருக்கும் பட்சத்தில், வழக்கு எப்படி தள்ளுபடியாகும் எனக் கூறியவாறு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சிலரிடம் கோவிந்தம்மாள் வாக்குவாதம் செய்துள்ளார். இதன் பின் நீதிமன்ற வளாகத்தில் உள்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்திற்கு அருகே தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் பற்றி அறிந்ததும் நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர்கள், போலீசார் என அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை சம்பாதித்த சொத்துக்காக தாயும், மகனும் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு போட்டு வழக்கு தள்ளுபடி ஆன நிலையில், தாய் கோவிந்தம்மாள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 என்கிற எண்ணுக்கு அழையுங்கள் அல்லது சிநேகா உதவி எண்ணுக்கு (044-24640050) அழையுங்கள். மேலும், இணைய வழித் தொடர்புக்கு (022-25521111) என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஒரே மாவட்டத்தில் 5 மக்களவைத் தொகுதிகள்; அல்லல்படும் திருப்பூர் மக்கள்... மறுசீரமைப்பில் மாற்றம் கொண்டுவரக் கோரிக்கை! - Tiruppur Constituency Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.