சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் உருவாக்கப்பட்ட “மின்மாற்றியின் இன்சுலேஷன் பாதுகாப்பிற்காக நெகிழ்வான வெளிப்புற பெல்லோ” என்ற கருத்திற்க்கான (concept) காப்புரிமையை, காப்புரிமை அலுவலகம் அல்லது மத்திய அரசு, காப்புரிமை எண் - 531159, கடந்த மார்ச் 30 அன்றைய நாளின் வாயிலாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு 2015, ஏப்ரல் 16 முதல் இருபது வருடங்களுக்கு வழங்கியுள்ளது.
மின்மாற்றியின் செயல்திறனைக் குறைப்பதில் ஈரப்பதம் ஒரு காரணியாகும். ஈரப்பதத்தைக் குறைக்க தற்போது பயன்படுத்தப்படும் வழக்கமான நடைமுறைகள் போதுமானதாக இல்லை. அவை விலை உயர்ந்தவை மற்றும் சிக்கலானவை. இந்த கண்டுபிடிப்பில், மின்மாற்றியின் சிலிக்கா ஜெல்லிற்குப் பிறகு சீல் செய்யப்பட்ட விரிவடையக்கூடிய பெல்லோ இணைக்கப்படுகிறது.
கன்சர்வேட்டரின் காற்று பகுதி உலர்ந்த நைட்ரஜனால் நிரப்பப்படுகிறது. மின்மாற்றியில் எண்ணெய் விரிவடையும் போது, கன்சர்வேட்டரில் உள்ள நைட்ரஜன் வாயு பெல்லோவிற்கு தள்ளப்படுகிறது. குறைந்த மின்சுமைகளில் இந்நிகழ்வு மாறி நடக்கிறது. மின்மாற்றியின் திறன் (Capacity) அடிப்படையில் பெல்லோவின் அளவைத் தீர்மானிக்க முடியும்.
இந்த அமைப்பு ஒரு மின்மாற்றியை சீல் செய்யப்பட்ட வகையாக மாற்றும். வெளிப்புற ஈரப்பதம் மற்றும் ஆக்ஸிஜனில் இருந்து முழுமையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இது மின்மாற்றியின் பராமரிப்புச் செலவு, நேரம் மற்றும் பழுதடைவதைக் குறைக்கிறது.
இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமான நுங்கு பதநீர்.. கிருஷ்ணகிரி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? - Iceapple Sales