ETV Bharat / state

எட்டிக்கூட பார்க்காத அண்ணாமலை.. சோர்வடைந்த பாஜகவினர்.. கோவை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்தது என்ன? - Lok Sabha Election results 2024

Annamalai K: பாஜகவினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், தமிழ்நாடு பாஜக தலைவரும், அக்கட்சியின் வேட்பாளருமான அண்ணாமலை இரண்டாம் இடத்தைப் பிடித்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு கூட வராததால் பாஜகவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

Annamalai K
அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 7:53 PM IST

Updated : Jun 5, 2024, 9:39 AM IST

கோயம்புத்தூர்: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டியே நிலவியது. இதில் பாஜக சார்பில் அண்ணாமலை, தமிழிசை செளந்திரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், ராதிகா சரத்குமார் என நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டதால், கவனிக்கத்தக்க தொகுதியாக கோவை தொகுதி பார்க்கப்பட்டது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என கடந்த தேர்தல்களில் நிரூபித்து வந்த அதிமுக, இந்தத் தேர்தலில் இளம் வேட்பாளரான அக்கட்சியின் ஐ.டி. பிரிவைச் சேர்ந்த சிங்கை ராமச்சந்திரனை களமிறக்கியது.

பல வருடங்களுக்குப் பின்னர் கோவை தொகுதியை மீண்டும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்த திமுக, கோவையின் முன்னாள் மேயர் கணபதி ப.ராஜ்குமாரை களம் காணச் செய்தது. தேர்தல் பிரச்சாரம் துவங்கியது முதல் கோவை நாடாளுமன்றத் தொகுதி விறுவிறுப்பாகவே காணப்பட்டது. செல்லும் இடங்களில் எல்லாம், தான் வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும், அப்போது கோவை தொகுதிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுக்க முடியும், தொழில்துறை உள்ளிட்ட துறைகளை மீட்டெடுக்க தன்னால் மட்டுமே முடியும் என்ற வாக்குறுதியை அண்ணாமலை அளித்தார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை குறித்த பிரசாரம் அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டது. இதனால் கோவையில் யாரைப் பார்த்தாலும் அண்ணாமலையைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. அண்ணாமலையின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என்பதைப் போல பிரசாரம் செய்யப்பட்டது. இதனால் திமுக, அதிமுக தோல்வியைத் தழுவும், பாஜகவின் கணக்கு கோவையில் இருந்து தொடங்கப்படும் என்றெல்லாம் பேசப்பட்டது.

ஆனால், திமுக தங்களுடைய வாக்கு வங்கி மற்றும் கூட்டணி பலத்தை நம்பி களத்தில் இறங்கியது. அதேபோல், அதிமுகவும் கோவை தங்களுடைய கோட்டை என்றும், இங்கு எளிதில் வெற்றி பெறுவோம் என்றும் நம்பியது. மேலும், அதிமுக வேட்பாளருக்கு அவரது சமூகம் சார்ந்த வாக்குகள் கிடைக்கும், அது அவரது வெற்றியை உறுதி செய்யும் என நம்பப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கணிசமான வாக்குகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். கோவை அதிமுகவின் கோட்டை என்று சூளுரைத்த அதிமுகவை பின்னுக்குத் தள்ளி அண்ணாமலை இரண்டாவது இடத்தை ஆரம்பம் முதல் தக்க வைத்தார்.

16வது சுற்றின் முடிவில் திமுக 4,12,196 வாக்குகளும், பாஜக 3,24,272 வாக்குகளும், அதிமுக 1,68,208 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 60,432 வாக்குகளும் பெற்றிருந்தன. கிட்டத்தட்ட 80 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிப்பதால் கோவை தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. இந்தச் சூழலில் வாக்கு எண்ணிக்கை மையமான கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும் காலை முதலே வாக்கு எண்ணிக்கையை கண்காணித்து வந்தனர்.

ஆனால், பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு எண்ணிக்கை மையத்தை எட்டியே பார்க்கவில்லை. வாக்கு எண்ணிக்கை துவங்கி 10 மணி நேரம் ஆகியும் வராததால் பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்தனர். எப்படியும் அண்ணாமலை வெற்றி பெறுவார், மத்திய அமைச்சர் ஆவார் என்று காத்திருந்த பாஜகவினர் ஏமாற்றமடைந்து 15 சுற்றுகளுக்குப் பிறகு மையத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024; கோவையில் படு தோல்வியை தழுவினார் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆபார வெற்றி!

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நேற்றே கோவை வந்திருந்த அண்ணாமலை, காலை 11 மணிக்கு மையத்துக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர் பின்னடைவு இருந்த செய்தி வெளியானதால் அவர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருவதைத் தவிர்த்துவிட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், அதிமுக வெற்றி பெறும், பாஜக போட்டியிலேயே இல்லை என்று கூறி வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரவில்லை. இந்தத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாம் இடம் பிடித்திருப்பது கோவை அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரச்சாரத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று அதிமுகவினர் அதிருப்தியில் இருந்ததாக தெரிய வந்தது. இந்த நிலையில், கோவையில் அதிமுக தோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியிருப்பதுடன், கட்சியின் முன்னணி தலைவர்கள் மீதான கோபத்தை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

தான் பரிந்துரைத்த வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி ஏற்காததாலும், பாஜகவினருக்கு சாதகமாக நடந்துகொள்ளும் உள்நோக்கத்துடன் எஸ்.பி.வேலுமணி கோவை தொகுதியில் பெரிய அளவுக்கு ஆர்வத்துடன் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் தொடர்ந்து கட்சியின் கடைமட்டத் தொண்டர்கள் பேசி வந்தனர். மேலும், இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே மோதல் நிலவி வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால், அண்மையில் மறைந்த கட்சியின் மூத்த நிர்வாகி மலரவனின் வீட்டுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த வந்திருந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில், கோவையில் அதிமுக மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையிலான மனக்கசப்பை அதிகரிக்கச் செய்யும் என்றே அரசியல்நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'மற்றவை' இல்ல 'மூணாவது'... அதிமுகவை பின்தள்ளிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்! - Naam Tamilar Katchi

Last Updated : Jun 5, 2024, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.