ETV Bharat / state

4,000 வகை நெல் விதைகளை இழந்துள்ள தமிழகம்.. வணிகத்தின் உச்சத்தில் கலப்பின விதைகள்.. வேளாண் அறிஞர் கூறுவது என்ன? - traditional seeds - TRADITIONAL SEEDS

Seeds: மரபு மற்றும் தோற்றக விதைகளை பாதுகாப்பது பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும், கலப்பின விதைகள் விதைச் சந்தையில் எவ்வாறு வியாபாரம் ஆகிறது என்பதையும் விளக்கும் விதமாக வேளாண் அறிஞர் பாமயன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

வேளாண் அறிஞர் பாமயன்
வேளாண் அறிஞர் பாமயன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 5:09 PM IST

மதுரை: ‘ஆடி பட்டம் தேடி விதை’ என்பார்கள். ஆடி மாதம் மழைக்காலத்தின் துவக்க மாதம் என்பதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர் பெருகி ஓடும். இந்த நீரினை விவசாயத்திற்குப் பயன்படுத்தி நல்ல விளைச்சல் காணலாம் என்பதால் விவசாயிகள் ஆடி மாதத்தில் விதைப்பார்கள்.

இதனால் தான் ஆடி மாதம் விதைகளுக்கான மாதமாகவே கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான் விதைத் திருவிழாக்கள் பல ஊர்களில் நடைபெறும். இத்திருவிழாக்களின் நோக்கமே மரபு சார்ந்த விதைகளை பாதுகாப்பதும், அதனை பரப்புவதுமே ஆகும்.

வேளாண் அறிஞர் பாமயன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பொதுவாக விதைகளில் பல்வேறு பிரிவுகளும், வகைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை மரபு சார்ந்த விதைகள் (traditional seeds) மற்றும் தோற்றக விதைகள் (indigenous seeds) ஆகும். இந்த விதைகளை பாதுகாப்பது பற்றியும், கலப்பின விதைகள் சந்தையில் எவ்வாறு வியாபாரம் ஆகிறது, அவைகளினால் என்னென்ன பயன்கள் என்பது பற்றியும் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு வேளாண் அறிஞர் பாமயன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அதில், "மரபு சார்ந்த விதைகளுக்கு முன்பாகவே தோற்றக விதைகள் இங்கு உண்டு. ஒரு பயிர் அல்லது விதை குறிப்பிட்ட இடத்தில் தோன்றி வளர்ந்தால் அது தோற்றக விதை எனப்படும். உணவு சார்ந்த தோற்றக விதைகள் குறித்து வாவிலோவ் என்ற ரஷ்ய அறிஞர் அறுதியிட்டு கூறியுள்ளார். அவர் கூறியதை தான் இன்று உலகம் முழுவதும் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த விதைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு பல நூற்றாண்டுகளாக மக்களிடையே புழங்கப்பட்டு அவை மரபு சார்ந்த விதைகளாக தோற்றம் பெறுகின்றன. அதாவது, ஒரு பழக்கம் என்பது வழக்கமாக மாறி, அந்த வழக்கம் என்பது ஒழுக்கமாக உருவெடுத்து, பின்னர் அதுவே மரபாக மாற்றம் பெறுகிறது.

ஆனால், தற்போது உள்ள காலக்கட்டத்தில் நமக்கு வழங்கப்படுகின்ற கலப்பின விதைகள் அல்லது ஹைபிரிட் என்று சொல்லக்கூடிய விதைகளும், மரபனு மாற்றம் (Genetically Modified) செய்யப்பட்ட விதைகளும், மறுமுறை விதைக்கும்போது விளைச்சல் தருவதில்லை.

இவைகள் பூச்சி, நோய்த்தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் உள்ளன. அதிக விளைச்சல் தரக்கூடிய கலப்பின, மரபணு மாற்றம் பெற்ற விதைகள் எல்லாம் தற்போது பெரு நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிட்டன. எனவே, பெரு நிறுவனங்களைச் சார்ந்தே உழவர்கள் இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இந்த நிலைமையை தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு உலகம் முழுவதும் உள்ள விதைச்சந்தையை பெருமளவு கைப்பற்றி வருகின்றனர். இந்த விதைச் சந்தைகள், குறிப்பாக 10 நிறுவனங்களின் கைகளில் உள்ளன. விதைச்சந்தையில் மட்டும் வருடத்திற்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் (Turnover) நடைபெறுகிறது. இது இனிவரும் காலங்களில் ரூ.8 லட்சம் கோடியாக உயர வாய்ப்பு இருக்கின்றது.

இதனால் நாம் என்ன உண்ண வேண்டும், என்ன பயிரிட வேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடியவர்களாக இந்த பன்னாட்டு நிறுவனங்கள் மாறிவிடுவார்கள். இதனால் தான் இந்த மரபு சார்ந்த விதைகளை நாம் சேகரிப்பதையும், பயன்படுத்துவதையும், அதனை அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பதையும் உணர்த்தும் விதமாக விதை திருவிழாக்களை கொண்டாடி வருகிறோம்.

மேலும், ஐநா மன்றமும் மரபு சார்ந்த விஷயங்களுக்கு சட்ட ரீதியான வாய்ப்புகளை பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசும் இதற்கேற்ற விதிமுறைகளை உருவாக்கி உள்ளது. ஆகையால், சட்ட விதிகளின் அடிப்படையில் உள்ளுர் அரசுகளும் உதவி செய்ய வேண்டும்.

விதைகளை பண்டமாக பார்ப்பது மிகவும் தவறு. அது உயிரின் ஆதாரம். நமது தலைமுறைகளின் தொடர்ச்சி. எதிர்கால வாழ்வியலின் அனைத்து அம்சங்களையும் கொண்டதாகத்தான் விதைகள் திகழ்கின்றன. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு இவற்றின் வரிசையில் ஆறாம் பூதம் என்று விதைகளை நாம் குறிப்பிடலாம்.

தோற்றக விதைகள் இழப்பு: ரிச்சார்யா போன்ற வேளாண் அறிஞர்கள் ஒடிசா பகுதியில் 40,000க்கும் மேற்பட்ட நெல் விதைகளை இழந்ததாகச் சொல்வார்கள். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், 3 - 4 ஆயிரம் அளவிலான நெல் விதைகளை நாம் இழந்துள்ளோம்.

அந்தந்த பகுதிக்கேற்ற காய்கறி விதைகளில் ஏராளமானவற்றை நாம் இழந்துள்ளோம். மதுரை மாவட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், 40லிருந்து 50 வகையான தோற்றக விதைகளை நாம் இழந்து விட்டோம். மிக அரிதாக ஒன்றிரண்டு விதைகளை மட்டுமே உழவர்கள் பாதுகாத்து வருகின்றனர். அவற்றையாவது நாம் மீட்டெடுக்க வேண்டும்.

விதை ஜெம் பிளாசம் என்று சொல்லக்கூடிய விதை ஊன்மம் (germ plasm) பல்வேறு வகையான பல்கலைக்கழகங்களிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை உயிர்ப்பித்து மீண்டும் உழவர்கள் கைகளில் கொடுத்து அல்லது ஆய்வு நிறுவனங்களிடம் கொடுத்து அந்த பாரம்பரிய விதைகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.

யாரெல்லாம் இது போன்ற விதை பாதுகாப்புக்கு முன் வருகிறார்களோ, அவர்களுக்கு அரசு நிதி உதவி செய்து, அவர்களை பாதுகாத்து அவர்களுக்கான ஒத்தாசைகளை செய்து தர வேண்டும். அப்படி செய்தால் நம் ஆரோக்கியமான உணவுக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

மரபு சார்ந்த விதைகளில் தான் முழுமையான ஆற்றல் உண்டு. ரசாயன வேளாண்மையிலும், கலப்பின விதைகளிலும் கிடைக்கக்கூடிய உணவு குறிப்பிட்ட சத்துக்கள் இன்றி தான் கிடைக்கின்றன. அந்த சத்துக்களின் அளவு பல்வேறு வகையிலும் குறைந்து இருக்கின்றன என உலகளாவிய பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆகையால், இந்த மரபு சார்ந்த விதைகளில் புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக கிடைக்கின்றன. உலகளாவிய வேளாண் நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்புகள், பாரம்பரிய விதைகளில் உள்ள முழுமையான ஊட்டங்கள் குறித்து மீண்டும் மீண்டும் தங்களது கருத்துக்களை வலியுறுத்தி வருகின்றன.

மரபு சார்ந்த விதைகள் என்பவை ஆரோக்கியத்திற்கான அடிப்படை என்றே நாம் கருத வேண்டும். எனவே அரசு, உழவர்கள், நுகர்வோர் என மூவரும் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டும். உழவர்கள் தங்களது நிலங்களில் குறைந்த அளவாவது மரபு சார்ந்த விதைகளை பயன்படுத்த முன்வர வேண்டும். அதேபோன்று நுகர்வோர்களும், மரபு சார்ந்த உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "விதைகளை பாதுகாக்காமல் வேளாண்மையை எப்படி காப்பாற்ற முடியும்?" - விவசாயிகள் ஆதங்கம்! - Seed festival 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.