ETV Bharat / state

யார் இந்த சு.வெங்கடேசன்? சிபிஐஎம் தரப்பில் இரண்டாவது முறையாக களமிறக்கப்படுவது ஏன்? - CPIM Madurai Lok Sabha Candidate

CPIM Madurai Lok Sabha Candidate Su.Venkatesan: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இரண்டாவது முறையாக மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்டேஷன் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

who-is-su-venkatesan-as-madurai-lok-sabha-constituency-candidate-from-cpim
சிபிஐ(எம்) சார்பாக மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் சு.வெங்கடேசன்.. யார் இவர்?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 6:34 PM IST

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும், சாகித்திய அகாதமி விருது பெற்றவரும், தற்போதைய மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் (54), மீண்டும் இதே தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 34 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராகவும், 33 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது சங்கத்தின் மதிப்புறு தலைவராக பணியாற்றி வருகிறார்.

2011ஆம் ஆண்டு இவர் எழுதிய முதல் நாவலான “காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை, உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் வார இதழில் 119 வாரம் வெளியான “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அரவான் திரைப்படத்தில் கதாசிரியர் ஆவார்.

கீழடி அகழாய்வு குறித்து மக்கள் அறிந்து கொள்ள பங்கு வகித்தவர். தமிழ் செம்மொழி தகுதி பெற பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார். தமிழ் மொழி தொடர்பான தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 5 ஆண்டு இருந்துள்ளார். மொழித் திணிப்பு எதிர்ப்பு, தாய்மொழி உரிமை, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு, இந்தியாவிலேயே போட்டித்தேர்வு மாணவர்களுக்கான தனித்த பூங்கா அமைத்தது, ரயில்வே சார்ந்த கோரிக்கைகள், கோவிட் பேரிடர் காலத்தில் அன்னவாசல் உள்ளிட்ட முன்னுதாரணமான பணிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் நைபர் ஆராய்ச்சி மையத்திற்கு தொடர் போராட்டம்,

மதுரை விமான நிலைய விரிவாக்கம், ரயில் போக்குவரத்து, மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், மதுரை தொழில் வளர்ச்சிக்கான தலையீடுகள், ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்விக் கடன் பெற்றுத்தந்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தியது, ஐ.ஐ.டி. நிறுவனம் உள்ளிட்டு சமூக நீதிக்காகக் குரல் எழுப்பியது என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவர். மனைவி பி.ஆர். கமலா. இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம் போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.