சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஏற்பாடுகள், வகுப்பறைகளை சுத்தம் செய்வது, பழுதுபார்த்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குனர் கஜலட்சுமி, அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
12ஆம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மே 6ஆம் தேதி தேர்வு முடிவு வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல், கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் பள்ளிகள் திறந்த உடன் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், கல்வி உபகரணங்களை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
மேலும், இந்த கூட்டத்தில், "இந்தாண்டு வழகத்தைவிட மாணவர்களுக்கான கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்பட்டுள்ளது. ஆனால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம், தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.
எனவே, மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து மே 3வது வாரம் ஆலோசனை செய்துக கொள்ளலாம் எனவும், பள்ளிகள் திறக்கும் போது ஆசிரியர் பணியிடங்களை நிர்ப்புவதற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக" கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் அஜித் படத்தில் குண்டூர் காரம் நடிகை! வெளியானது குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்! - Good Bad Ugly Update