ETV Bharat / state

சினிமாவுக்கு குட்பை? கட்சி தொடங்கியபின் விஜயின் முடிவு என்ன? - vijay last movie in tamil

கட்சி தொடங்கிய பின்னர் சினிமாவில் நடிப்பது தொடருமா என்பது குறித்து தமது அறிக்கையில் நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 1:36 PM IST

Updated : Feb 2, 2024, 1:44 PM IST

சென்னை: நடிகர் விஜய் தமது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ள நிலையில், இதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணிகளும் துவங்கியுள்ளன. இதனிடையே கட்சி துவங்கிய பின்னர் விஜய் சினிமாவில் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழாமல் இல்லை.

இதற்கும் நடிகர் விஜய் தமது அறிக்கையிலேயே விளக்கம் அளித்துள்ளார். " என்னைப் பொறுத்த வரையிலும் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி. முன்னோர்கள் பலரிடமிருந்து பாடங்களை படித்து அதற்காக நான் என்னை தயார் செய்து வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுது போக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ள, இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப்பணிக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான, அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழக மக்களுக்கு நான் செய்யும் நன்றிக் கடனாக கருதுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஜய் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த திரைப்படத்திற்குப் பின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் சூப்பர்குட் பிலிம்சின் 100வது திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் நடிகர் விஜய் முழுநேரமாக அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமது அறிக்கையில் தேர்தல் பற்றி குறிப்பிட்டுள்ள நடிகர் விஜய், "வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு" என கூறியுள்ளார். மேலும் , " வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும்" விஜய் தமது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

Last Updated : Feb 2, 2024, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.