ETV Bharat / state

'திராவிடம்' என்ற சொல் எப்படி வந்தது? - தமிழ்ப் பேராசிரியர் சீனிவாசன் அளித்த வரலாற்று விளக்கம்!

கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே 'திராவிடம்' என்ற சொல்லுக்கான சான்றுகள் கல்வெட்டு, இதிகாசம், இலக்கியங்களில் உள்ளன' என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பேராசிரியர் சீனிவாசன்
ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பேராசிரியர் சீனிவாசன் (Credits- ETV Bharat Tamil Nadu and RAJ BHAVAN X PAGE)

மதுரை: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்'' என்ற வரி விடுபட்டிருந்தது. இந்த விவகாரமும் மற்றும் நிகழ்ச்சி மேடையில் ஆளுநர் பேசியது ஆகியவை சர்ச்சைக்குள்ளானது.

இது குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் "திராவிடம் குறித்து முழுவதுமாக அறிந்து கொண்டு பேசுவதுதான் அதிகார வர்க்கத்தினருக்கு அழகு" என தெரிவித்துள்ளார் காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவருமான, பேராசிரியருமான சீனிவாசன்.

பேராசிரியர் சீனிவாசன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

ஆளுநர் சுட்டிக்காட்டியிருக்கலாம்: இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,"ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற முக்கியமான வரியை தவிர்த்துவிட்டுப் பாடியுள்ளனர். அந்நிகழ்ச்சியின்போது நிகழ்ந்த இந்தத் தவறை ஆளுநர் ஏதேனும் ஒரு வகையில் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அதனைச் செய்திருந்தால் இப்படியொரு சர்ச்சைக்கே எழுந்திருக்காது.

திராவிடி: அதேபோன்று 'திராவிடம்' என்ற சொல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு வரலாற்றுப் பிழை. தமிழ், திராவிடம் குறித்து முழுமையாகத் தெரியாமல் அவர் பேசியுள்ளார். கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் 64 எழுத்துக்களைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. அதில் 'திராவிடி' என்ற ஒரு சொல் இடம் பெற்றுள்ளது. அது தமிழ் அல்லது திராவிடம் குறித்துச் சுட்டும் சொல்தான் என தொல்லியல் ஆய்வாளர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

திராவிட பதி: அதேபோன்று மகாபாரதம் அனுஷாஷன பர்வத்தில் திராவிடம் என்ற சொல்லாட்சி உள்ளது. கேரள மாநிலம் காலடியில் பிறந்த ஆதிசங்கரர், ஞானசம்பந்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது 'திராவிட சிசு' என்று 8-9-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார். சதபத பிரமாணம் என்ற வேதவியாக்கியானத்தில் 'திராவிட பதி' என்ற சொல் காணப்படுகிறது.

வடபகுதியில் பயன்படுத்தப்பட்ட இந்த நூல்லி திராவிடம் என்ற சொல் எப்படி வந்தது? திராவிடம் என்ற சொல் கி.மு.1ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து இந்த மண்ணில் புழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் இது புனையப்பட்டது என்ற ஆளுநரின் கூற்று ஏற்புடையது அல்ல. அதற்குப் பிறகு கீழைச் சாளுக்கிய செப்பேடு ஒன்றில் 'திராவிட விஜயம்' என்ற சொல் காணப்படுகிறது.

இதையும் படிங்க: ஆளுநருக்கு ஆயிரம் போஸ்ட் அனுப்பிய திராவிடர் விடுதலைக் கழகம்!

திராவிட பல்கலைக்கழகம்: ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிடப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான 40 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது. அதற்கான பணிகளில் ஈடுபட்டவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த வ.அய்.சுப்பிரமணியம்.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்: இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி 'சமஸ்கிருதம்'தான் என்று என நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், 1856-இல் கால்டுவெல், திராவிட மொழிகள் வேறு, வடஇந்திய மொழிகள் வேறு என அதுவரை நிலவிய கூற்றை தகர்த்தெறிந்தார். ஆனால் கால்டுவெல்லுக்கும் 40 ஆண்டுகள் முன்னர் 1816இல் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ், இதே கூற்றை வலியுறுத்தி தனது ஆய்வுகளை நிறுவியிருந்தார்.

பாகிஸ்தானில் திராவிட மொழி: அதேபோன்று திராவிட மொழிகள் நமது திராவிடப்பகுதிகளில் மட்டுமன்றி, இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களிலும் இருந்துள்ளன. இதனை முன்னிட்டே கால்டுவெல், தென் திராவிடம், நடு திராவிடம், வட திராவிடம் என திராவிட மொழிகளை மூன்றாகப் பகுத்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் வழங்கப்பட்டு வரும் பிராகுய் என்ற மொழிக்கும், தென் திராவிட மொழிகளுக்கும் கூட தொடர்பு உள்ளது என மொழியியலாளர்கள் கூறுகின்றனர். ஆகையால் இதுகுறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை வன்மையாக மறுக்கிறேன். ஆகையால் இனி தமிழ் குறித்தோ திராவிடம் குறித்தோ பேசினால் அதனை முழுமையாகத் தெரிந்து கொண்டு பேசுவது சராசரி மனிதர்களுக்கு மட்டுமன்றி, ஆட்சி அதிகாரங்களுக்கும் நல்லது என்பதுதான் எனது பணிவான வேண்டுகோள்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.