ETV Bharat / state

TNPSC Group 2 தேர்வில் ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை! - Group 2 Question on Governor

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 6:52 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஆளுநர் அதிகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி(கோப்புப் படம்), வினாத்தாள்
டிஎன்பிஎஸ்சி (கோப்புப் படம்), வினாத்தாள் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2A பணிக்கான தேர்வு இன்று (செப்.14) நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் 7,93,966 பேர் விண்ணப்பித்த நிலையில், 5,81,035 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

TNPSC குரூப் 2 மற்றும் 2A போட்டித் தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியாகி, ஜூலை 19 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த தேர்வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட 507 பணியிடங்களும், குரூப் 2A-வில் உதவி ஆய்வாளர், உதவியாளர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 1,820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதையும் படிங்க: 20வது முறை TNPSC attempt.. திருச்சியில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய தந்தை - மகள்!

இந்நிலையில், குரூப்-2 தேர்வின் வினாத்தாளின் பொதுஅறிவு பகுதியில், ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாளில் 90வது கேள்வியாக கேட்கப்பட்டிருந்த கேள்வியானது,

கூற்று A. இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இருவிதமான பணிகளை செய்கிறார்.

காரணம் (R). ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது.

A. கூற்று (A) சரி ஆனால் காரணம் (R) தவறானது.

B. கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி. மேலும் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) உள்ளது.

C. கூற்று (A) தவறானது. ஆனால் காரணம் (R) சரி.

D. கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி.. ஆனால் கூற்று (A)க்கான சரியான விளக்கமாக காரணம் (R) இல்லை.

E. விடை தெரியவில்லை.

என கேட்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாகவே அவருக்கும், திமுக அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல், திமுகவின் கொள்கைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்து வருகிறார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பாடத் திட்டங்களையும் ஆளுநர் விமர்சித்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வில் ஆளுநரின் அதிகாரம் குறித்து, இதுபோல கேள்வி வைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.