ETV Bharat / state

மே மாதத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் தொடங்குகிறதா?

Application date for BE courses: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்புகளில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பம் மே 6ஆம் தேதி அல்லது அதற்கு ஒரு வாரம் முன்பாக துவங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணாவர்களுக்கு விண்ணப்பம் எப்போது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 7:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்புகளில் இளங்கலை பட்டப்படிப்பில் (பிஇ, பிடெக், பிஆர்க்) சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பம், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளான மே 6ஆம் தேதி முதல் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. 2024 - 2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம், சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகியவற்றை நடத்துவது குறித்த கூட்டம், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி துவங்கி 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுத்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் மே 6ஆம் தேதியிலிருந்தோ அல்லது ஒரு வாரம் முன்பாகவோ துவங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு ஒரு மாதம் வரை ஆன்லைன் வழியில் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வை, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்னர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் படிப்பில் நடப்பாண்டில் புதிய படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கும் என தெரிவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விபத்து ஏற்படுத்திய நபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து; உயர் நீதிமன்றக்கிளை கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.