விழுப்புரம்: தவெகவின் முதல் அரசியல் மாநாடு சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற்றது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கட்சியின் கொள்கைகள் மாநாட்டு மேடையில் பிரகடனப்படுத்தப்பட்டன.
மாநாட்டு மேடையில் வீற்றிருந்த தவெக தலைவர் விஜயின் ஒப்புதலுடன் கட்சியின் கொள்கைகளை வாசித்தார் பேராசிரியர் சம்பத்.
- பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்.. பிறப்பால் அனைவரும் சமம்
- தனிமனித, சமூக, பொருளாதார சுதந்திரம்
- சாதி, மத, பாலின பாகுபாடில்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது
- மதச்சார்பற்ற சமூகநீதி
- மாநில தன்னாட்சி உரிமைகளை மீட்பது
- இருமொழிக் கொள்கை
- போதையில்லா தமிழகம்
- விகிதாசார அடிப்படையிலான இடஒதுக்கீடு
- அனைவரும் தூய்மையான குடிநீர் என்பன உள்ளிட்ட அம்சங்களை தவெகவின் கொள்கைகளாக பேராசிரியர் சம்பத் அறிவித்தார்.
விஜய் வாய்ஸ்: முன்னதாக, மேடையில் வெளியிடப்பட்ட த.வெ.க. கொள்கை விளக்கப் பாடலில் ”பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்போம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக்கொள்கை வாயிலாக தவெக#secularsocialjusticeideologies #தமிழகவெற்றிக்கழகம் #TvkVijayMaanadu #TVKMaanaadu #TVK #TVKVijay #Vikravandi #TVKConference #TVKMaanaaduOct27 #ETVBharatTamil pic.twitter.com/itq9UjDD2s
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) October 27, 2024
சாதி, மத, பாலின பாகுபாடில்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளோடு உங்களுக்காக உழைக்க நான் வரேன். தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டை உயர்த்தும் கழகம்” என விஜய் வாய்ஸும் ஒலித்தது.