ETV Bharat / state

டெபாசிட் இழப்பு என்றால் என்ன? முழு விவரம்! - Loss Security Deposit - LOSS SECURITY DEPOSIT

Security Lose Deposit in Tamil: வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் செலுத்தும் வைப்புத் தொகையை திரும்பப் பெற அத்தேர்தலில் குறிப்பிட்ட சில விதிகளுக்குள் வேட்பாளரின் வெற்றி பதிவாகியிருக்க வேண்டும். இது குறித்த முழு விவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

EVM
வாக்குப்பதிவு இயந்திரம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 10:04 PM IST

சென்னை: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தேசிய அளவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுக முதல் பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர்.

டெபாசிட் இழப்பு என்றால் என்ன? இந்தியாவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 1951-இன் படி மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில், மக்களவைத் தேர்தலில் பட்டியலின, பழங்குடியின வேட்பாளர்கள் 12,500 ரூபாய் வைப்புத் தொகையாக தேர்தல் ஆணையத்தில் செலுத்த வேண்டும்.

அதேபோல், இதர வேட்பாளர்கள் 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இந்த டெபாசிட் தொகையை, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது செலுத்த வேண்டும். இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவாக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாமகவை வைத்து வாக்கு வாங்கியை உயர்த்திய பாஜக? ஆறு தொகுதிகளில் டெபாசிட் இழந்த பாமக.. காரணம் என்ன? - Pmk Bjp Alliance

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.