ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கையில் சந்தேகமா? வேட்பாளர்கள் என்ன செய்யலாம்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வழிமுறைகள்! - EVM microcontrollers system - EVM MICROCONTROLLERS SYSTEM

Vote Count: வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால், அதனை தீர்த்துக்கொள்ளும் புதிய வழிகாட்டு முறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்கள் பரிசோதனை செய்வதற்கான தகுதிகள் என்னென்ன, எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

EVM Machines
வாக்குப்பதிவு இயந்திரம் (Credits - ECI 'X' page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 4:48 PM IST

Updated : Jun 3, 2024, 11:30 AM IST

சென்னை: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் நேற்றோடு ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனையடுத்து, நாளை மறுநாள் (ஜூன் 4) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் இருந்தால், அதனை முறையாக விண்ணப்பித்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்கள் பரிசோதனை செய்ய உள்ளது. இதற்கான விரிவான நிர்வாக வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

இதன்படி, மொத்தம் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீதம் இயந்திரங்களை பரிசோதனை செய்ய இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் அளிக்க வேண்டும்.

மேலும், இந்த நடைமுறைக்கு விண்ணப்பிக்க ரூ.40,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். விண்ணப்பத்துடன் பரிசோதிக்க தேர்வு செய்த வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரம் ஆகியவற்றின் அடையாள எண்ணை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

இதுபோன்று விண்ணப்பிப்பது, சரி பார்ப்பது, கட்டணத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஜூன் 4' வாக்கு எண்ணிக்கை இப்படித்தான் நடக்கும்! தேர்தல் முடிவுகளுக்கு தயாராகுங்கள்!

Last Updated : Jun 3, 2024, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.