ETV Bharat / state

கர்நாடகாவில் மழை எதிரொலியால் காவிரியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. ஒகேனக்கலில் பரிசல் இயக்கத் தடை! - Hogenakkal cauvery flood

Water released from Kabini Dam: கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லை பிலிகுண்டுலுக்கு வந்தடைந்தது.

கபினி அணை
கபினி அணை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 5:26 PM IST

தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணை நிரம்பியதால் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட நீர் இன்று கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதி வந்தடைந்தது.

தருமபுரி காவிரி ஆற்றில் 4 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி திறக்க முடியாது என்றும், விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மாலை தமிழக எல்லைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைந்துள்ளது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லை வந்தடையும் பொழுது நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்று இரவு ஒகேனக்கல்லை தண்ணீர் வந்தடையும் எனவும், நீர்வரத்து அதிகரித்து நாளை காலை மேட்டூர் அணைக்குச் சென்றடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கான நீர் பங்கீட்டை வழங்காமல், மழையால் உபரி நீரை கர்நாடகா திறப்பதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்திற்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு! - 8000 cusecs of water to Tamil Nadu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.