ETV Bharat / state

ஜோதிடர் கூறியதால் அரசு அலுவலகத்தில் விநாயகர் கோயில்.. இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்.. கரூரில் நடந்தது என்ன? - Temple Built In Govt Office - TEMPLE BUILT IN GOVT OFFICE

கரூர் தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட விநாயகர் கோயில் முற்போக்கு அமைப்புகளின் எதிர்ப்பால் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.

தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 8:25 AM IST

கரூர்: கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தான்தோன்றி மலையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்திற்குள் உள்ள காலி இடத்தில் விநாயகர் கோயில் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, தாந்தோணி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி ஏற்பாட்டில் நடைபெற்று வந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்து சாமானிய மக்கள் நல கட்சியின் மாநில பொது செயலாளர் குணசேகரன் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் தனபால் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் நிர்வாகிகள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

சாமானிய மக்கள் நல கட்சியின் மாநில பொது செயலாளர் குணசேகரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விநாயகர் கோயில் கட்டுமான பணிகளை நேற்று (செப்.13) துரிதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாமானிய மக்கள் நல கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன், அவ்விடத்திலிருந்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், "தாந்தோணி ஒன்றிய பெருந்தலைவர் சிவகாமி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்துகொண்டு, திராவிட மாடல் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கோயில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பணி நீக்கம் செய்ய வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தார்.

இதையும் படிங்க: பன் + க்ரீம் என புதிய விளம்பரத்தை வெளியிட்ட அன்னபூர்ணா ஹோட்டல்!

இதன் தொடர்ச்சியாக, நேற்று (செப்.13) இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் கொண்டு தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வந்த விநாயகர் கோயிலை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து வழக்கறிஞர் குணசேகரன் கூறுகையில், "அரசு அலுவலகங்களில் அனைத்து மதத்தினரும் பணியாற்றும் நிலையில் அரசு அலுவலக வளாகங்களுக்குள் குறிப்பிட்ட மதத்திற்கு என்று கோயில் கட்டுவது என்பது மத நல்லிணக்கத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் எதிரானது.

அந்த வகையில், தாந்தோணி வட்டார பெருந்தலைவர் சிவகாமி மற்றும் அவரது கணவர் ஆகியோர் அதிகாரிகள் துணையுடன் புதிதாக கோயில் கட்டுவதற்கான பணிகளை துவக்கி இருப்பதாக அறிந்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முற்போக்கு பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தோம். அதன் பின்னர் இரவோடு இரவாக அதிகாரிகள் அந்த கோயிலை அகற்றி உள்ளனர் இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அரசு அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்து அரசு அதிகாரிகள் செயல்படுவதை சாமானிய மக்கள் நல கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 1968ஆம் ஆண்டு அண்ணா ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாணையை அதிகாரிகள் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

ஆகவே, தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சட்டப்படியான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தாந்தோணி வட்டார வளர்ச்சி பெருந்தலைவர் சிவகாமி மற்றும் அவரது கணவர் வேலுச்சாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஒன்றிய பெருந்தலைவர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு அரசு நிர்வாகத்தில் பல்வேறு தலை தலையீடுகளை செய்து வருகிறார். இதுகுறித்தும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோயில் கட்டினால், தற்போது உள்ள தாந்தோணி வட்டார வளர்ச்சி பெருந்தலைவர் சிவகாமியே மீண்டும் பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என ஜோதிடர் கூறியதாகவும், அதன் காரணமாகவே கோயில் கட்டும் முயற்சியில் பெருந்தலைவர் சிவகாமி ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.