ETV Bharat / state

இலவச அயலக மொழிப்பயிற்சி வகுப்பிற்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் பழனி அறிவிப்பு - Foreign language training course - FOREIGN LANGUAGE TRAINING COURSE

Free Foreign language training course: தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் (OMCL) நடைபெறும் இலவச அயலக மொழிப்பயிற்சி வகுப்பிற்கு செவிலியர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்

விழுப்புரம் ஆட்சியர் பழனி
விழுப்புரம் ஆட்சியர் பழனி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 2:29 PM IST

விழுப்புரம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்(OMCL) தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமாக பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பாக 11062 திறன் மற்றும் திறனற்ற தொழில்முறை பணியாளர்கள் ஆஸ்திரேலியா, பக்ரைன், கனடா, குவைத், ஓமன், சவுதி அரேபியா, லிபியா போன்ற நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், 5500ற்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் சவதி அரேபியாவின் சுகாதார அமைச்சகத்திலும் மற்றும் அதிக அளவிலான வீட்டு பணியாளர்களை பணியமர்த்தப்பட்டுள்ளனர். குவைத், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பணிபுரிய விரும்பும் செவிலியர்கள் அயல்மொழித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

எனவே, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஜப்பான் மற்றும் ஜெர்மனி மொழிகளுக்கான இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பம் உள்ள செவிலியர்கள் உடன் கீழ்கண்ட சமூக வலைதலங்களில் அல்லது தொலைபேசி எண்கள் வழியாகவோ தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.

1)(WhatsApp Number) 6379179200

2) https://omcmanpower.tn.gov.in/

3) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVNgjofeyVZdUIZd8nrtX2bQ 9b1whPvgsYEooMzr-CuYfUXg/viewform

4) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் 044-22502267 22505886

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ள செவிலியர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசின் விருது! - விண்ணப்பிப்பது எப்படி? - சமூக சேவகருக்கான விருது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.