ETV Bharat / state

பொதுக்கழிப்பிடம் கட்டித்தர கோரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்தினர்!

8 ஆண்டுகளாக புதிய பொதுக் கழிப்பிடம் கட்டித்தர எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, வில்லிசேரி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 12:22 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த வில்லிசேரி கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த பொதுக்கழிப்பிடத்தை அகற்றிவிட்டு, புதிய கழிப்பிடம் கட்டித்தர உள்ளதாகக் கூறி, 8 ஆண்டு முன்னர் அக்கழிப்பிடம் அகற்றப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது வரை, புதிய கழிப்பிடத்தைக் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் விளைவாக, அப்பகுதி மக்கள் வில்லிசேரி-சமாதானபுரம் சாலையை பொதுவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலை முழுவதும் மனித கழிவுகள் நிரம்பியுள்ளதால், அப்பகுதி சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு டைபாய்டு, மலேரியா, சீதபேதி, வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவி பலருக்கும் நோய் பாதிப்புக ஏற்பட்டுள்ளதாகவும் அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: "வணக்கம் வணக்கம்" - பரிட்சைக்கு பயமேன் நிகழ்ச்சியில் புதுச்சேரி மாணவிக்கு பிரதமர் பதில்!

இதனிடையே, பொதுக்கழிப்பிடம் குறித்து கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளிடம், பல முறை மனு வழங்கியும், தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வில்லிசேரி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (ஜன.29), தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரங்கநாயகலு தலைமையில், ஊர்மக்கள் இணைந்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாயிடம் மனு வழங்கினர். இதனைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது கோட்டாட்சியர் கூறியதையடுத்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவரகள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்த சிறுவன் உயிரிழப்பு.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.