ETV Bharat / state

பறவைகளுக்காக 18 ஆண்டுகளாக பட்டாசு இல்லாமம் தீபாவளி.. ஈரோடு அருகே வியக்க வைக்கும் கிராமங்கள்! - VELLODE BIRD SANCTUARY

இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் 18-ஆவது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர் ஈரோடு வெள்ளோடு சுற்றுப்பகுதி மக்கள்..

Vellode Bird Sanctuary
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 8:51 PM IST

ஈரோடு: தீபாவளி பண்டிகை என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டத்தை தொடங்கிவிடுவர். ஆங்காங்கே, பட்டாசு ஒலிகளும் தீபாவளிக்கு முன்பே கேட்கும். இப்படி தீபாவளிப் பண்டிகையை விமரிசையாக கொண்டாடும் மக்களும், ஊர்களும் இருக்கும் நிலையில், தீபாவளிப் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடாத வித்தியாசமான பல கிராமங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீபாவளிப் பண்டிகையை 18 ஆண்டுகளாக தவிர்த்து வருகிறது. அக்கிராமங்கள் தீபாவளிப் பண்டிகையை தவிர்த்து வருவதற்கான காரணம் கேட்போரை கூடுதல் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

பறவைகளுக்காக 18 ஆண்டுகளாக தீபாவளியை தவிர்க்கும் கிராமம் (Credit - ETV Bharat Tamil Nadu)

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்: ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே 'வெள்ளோடு பறவைகள் சரணாலயம்' அமைந்துள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர், மழைக்காலங்களில் ஓடைகளில் நிரம்பி வரும் நீர் ஆகியவற்றின் மூல ஆதாரமாகக்கொண்டு விளங்குகிறது இந்த சரணாலயம்.

புதுப்பிக்கப்பட்ட சரணாலயம்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாகக் குளம் மற்றும் மரங்கள் வறண்டுபோனது. இதனையடுத்து ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் இந்தப் பறவைகள் சரணாலயம் புதுப்பிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, சரணாலயத்தைச்சுற்றிலும் கரைகள் பலப்படுத்தப்பட்டதோடு, சிறு பாலங்கள், நடைபாதைகளில் பறவைகளின் ரம்மியமான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனிடையே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பட்டாம் பூச்சி பூங்கா, செல்ஃபி பாயிண்ட் என அமைக்கப்பட்டு சரணாலயமே எழில் மிகுந்து காட்சியளிக்கின்றது.

பறவைகள் ஓவியங்களை ரசிக்கும் குழந்தைகள்
பறவைகள் ஓவியங்களை ரசிக்கும் குழந்தைகள் (Credit - ETV Bharat Tamil Nadu)

இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் பறவைகள்: பெரும்பான்மையாக இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்ணுகின்றன. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவதால், அச்சமயம் சீசன் தொடங்குகிறது.

இதையும் படிங்க: பறவைகளைக் காண முசோரி போலாமா? உத்தரகாண்ட் அரசின் சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகள்

உள்நாட்டுப் பறவைகள்: பறவைகள் இனப்பெருக்க காலங்களில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால், இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை நோக்கி வருகின்றன.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் (Credit - ETV Bharat Tamil Nadu)

வெளிநாட்டுப் பறவைகள்: சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கால உள்ளான், செம்பருந்து, பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக வெள்ளோடு சரணாலயத்திற்கு வருகின்றன.

மனதுக்கும் அமைதி தரும் கீச்சொலிகள்: இப்பறவைகள் அனைத்தும் இங்குள்ள குளத்தில் குளித்து கும்மாளமிடுவதோடு, அதிலுள்ள மீன்களை உணவாக உண்டு தங்களின் பசியைத் தணிக்கின்றன. இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் இங்கிருந்து பறந்து செல்வதை அவைகளின் வழக்கமாகக் கொண்டுள்ளன.

இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும் இந்த பறவைகளின் கீச்சொலிகளை கேட்கும்போது காதுகளுக்கு மட்டுமில்லாது மனதுக்கும் ஒரு அமைதியை அளிக்கின்றது. இந்தப் பறவைகளின் கூட்டத்தைக் காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வருவதுண்டு.

இதையும் படிங்க: வித்தியாசமான செல்லப்பிராணிகளை வளர்க்க ஆசையா? ஹாபியை பிஸ்னஸாக மாற்றிய தஞ்சை இளைஞர்!

கிராம மக்களின் முடிவு: இவ்வாறு இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு எந்த விதமான இடையூறும் வந்து விடக்கூடாது என அப்பகுதியிலுள்ள கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதன் ஒருபகுதியாக, இந்த பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 18 ஆவது ஆண்டாகப் பட்டாசு வெடிக்காத தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டும் இதே வழக்கத்தைப் பின்பற்றவுள்ளனர். இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி கூறுகையில், "சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க மரங்களை வைக்க வேண்டும். அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும், அதனை பார்க்க பொதுமக்கள் வருவதும் எங்களது கிராமத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.