விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுத் தாக்கல் வரும் ஜூன் 24ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்கள் ஜூன் 26 ஆம் தேதி திரும்பப் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டு நிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜுலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தைச் சார்ந்த பொதுச் செயலாளர் ஆறுமுகம் வெள்ளை புடவை அணிந்தும், கையில் கரும்பு, பனை ஓலை. மஞ்சள் தாலியை ஏந்தியும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தமிழக அரசு, டாஸ்மாக்கால் உயிரிழப்பவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கரும்பு சாரில் எடுக்கப்படும் மெத்தனால் கொண்டு மது தயாரிக்க வேண்டும். பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் நீரைப் பானமாக வழங்க வேண்டும்.
மேலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் இதனை நிச்சயமாகச் செய்வேன். கள்ளச்சாராயத்தினால் இளம் பெண்கள் விதவைகளாக மாறியுள்ளதைத் தடுக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி வெள்ளை புடவை அணிந்து கையில் மஞ்சள் தாலியுடன் மனு அளிக்க வந்ததாகவும், மது குடித்த மதுபான பாட்டில்களைப் பொறுக்கி எடுத்து வந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் தொகையைக் கட்டியுள்ளேன்" என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.. வாழ்வாதாரம் போய்விட்டதாகத் தவிக்கும் கடைக்காரர்கள்... தாம்பரத்தில் நடந்தது என்ன?