ETV Bharat / state

விக்கிரவாண்டியில் அன்னியூர் சிவா அமோக வெற்றி - VIKRAVANDI BYELECTION RESULT 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 6:43 AM IST

Updated : Jul 13, 2024, 2:57 PM IST

Etv Bharat
Vikravandi Byelection 2024 (ETV Bharat)

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை.13) எண்ணப்படுகின்றன. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூலை 10ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE FEED

2:54 PM, 13 Jul 2024 (IST)

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,195 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,026 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 10,479 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

2:22 PM, 13 Jul 2024 (IST)

19வது சுற்று நிலவரம்

19வது சுற்று முடிவுகளின் படி திமுகவின் அன்னியூர் சிவா 1,18,637 வாக்குகளும், பாமகவின் சி.அன்புமணி 53,438 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயா 10,130 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

1:54 PM, 13 Jul 2024 (IST)

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வாழ்த்து கூற வந்த துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து எம்.எல்.ஏவும், மருத்துவருமான எழிலன் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

1:51 PM, 13 Jul 2024 (IST)

திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 17வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,06,908 வாக்குகளுடம், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 48,123 வாக்குகளும் பெற்றுள்ளனர். மீதம் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட திமுக வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்றுள்ளதால் வெற்றியை உறுதி செய்துள்ளார்

1:28 PM, 13 Jul 2024 (IST)

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 14வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 88 ஆயிரத்து 977 வாக்குகள் பெற்று வெற்றியை நோக்கி பயணித்து வருகிறார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 38 ஆயிரத்து 975 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 7 ஆயிரத்து 275 வாக்குகளும் பெற்றுள்ளனர். அன்னியூர் சிவா 50 ஆயிரத்து 2 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

12:51 PM, 13 Jul 2024 (IST)

13வது சுற்று நிலவரம்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 13வது சுற்றில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் 83 ஆயிரத்து 431. பாமக வேட்பாளர் சி.அன்புமணி பெற்ற வாக்குகள் 36 ஆயிரத்து 241 வாக்குகள். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 6 ஆயிரத்து 814 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 47 ஆயிரத்து 190 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

12:42 PM, 13 Jul 2024 (IST)

42 தபால் வாக்குகள் செல்லாதவை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் அன்னியூர் 494 தபால் வாக்குகள் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 217 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 45 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் 798 தபால் வாக்குகள் பதிவான நிலையில் அதில் 42 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

12:41 PM, 13 Jul 2024 (IST)

12வது சுற்று முன்னிலை நிலவரம்!

12வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 43 ஆயிரத்து 640 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

12:21 PM, 13 Jul 2024 (IST)

11வது சுற்றிலும் திமுக வேட்பாளர் முன்னிலை!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 11வது சுற்றில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 69 ஆயிரத்து 856 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 30 ஆயிரத்து 421 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 5 ஆயிரத்து 265 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 39 ஆயிரத்து 435 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

12:07 PM, 13 Jul 2024 (IST)

10 சுற்றுகளில் திமுக வேட்பாளர் வெற்றி முகம்!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 10வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 63 ஆயிரத்து 205 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 27 ஆயிரத்து 845 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 5 ஆயிரத்து 265 வாக்குகளும் பெற்றுள்ளனர். 35 ஆயிரத்து 360 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.

12:04 PM, 13 Jul 2024 (IST)

9வது சுற்று முடிவில்...

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 9வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 57 ஆயிரத்து 483 வாக்குகள் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 24 ஆயிரத்து 130 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 4 ஆயிரத்து 704 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 33 ஆயிரத்து 353 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

11:38 AM, 13 Jul 2024 (IST)

8வது சுற்று நிலவரம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 8 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 51 ஆயிரத்து 567 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 19 ஆயிரத்து 812 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 4 ஆயிரத்து 187 வாக்குகளும் பெற்றுள்ளனர். அன்னியூர் சிவா 31 ஆயிரத்து 755 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

11:25 AM, 13 Jul 2024 (IST)

7வது சுற்று நிலவரம்!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 7வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 44 ஆயிரத்து 780 வாக்குகள் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 17 ஆயிரத்து 359 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 3 ஆயிரத்து 556 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 27 ஆயிரத்து 421 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

11:15 AM, 13 Jul 2024 (IST)

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ஏழாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதாக எண்ணி விக்கிரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கி வெற்றி பெற்றதாக கொண்டாடி வருகின்றனர்.

11:11 AM, 13 Jul 2024 (IST)

6வது சுற்று வாக்கு எண்ணிக்கை விபரம்:

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 6 வது சுற்று முன்னிலை விபரம்,

அன்னியூர் சிவா(திமுக)- 38 ஆயிரத்து 554 வாக்குகள்,

சி.அன்புமணி (பாமக)- 13 ஆயிரத்து 656 வாக்குகள்,

அபிநயா (நாதக)- 3 ஆயிரத்து 178 வாகுகள்.

ஆறு சுற்றுகள் முடிவில் 24 ஆயிரத்து 898 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.

10:47 AM, 13 Jul 2024 (IST)

5வது சுற்று முன்னிலை விபரம்!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 5 வது சுற்று முன்னிலை விபரம்,

திமுக: அன்னியூர் சிவா- 31 ஆயிரத்து 151 வாக்குகள்,

பாமக: சி.அன்புமணி- 11 ஆயிரத்து 483 வாக்குகள்,

நாம் தமிழர்: அபிநயா- 2 ஆயிரத்து 275 வாக்குகள்.

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 19 ஆயிரத்து 668 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

10:42 AM, 13 Jul 2024 (IST)

10:30 மணி நிலவரம்!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காலை 10:31 மணி நிலவரப்படி,

திமுக:- 24,171 வாக்குகளும்,

பாமக:- 8,825 வாக்குகளும்,

நாதக:- 1,763 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

15346 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார்.

10:36 AM, 13 Jul 2024 (IST)

அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை!

நான்காவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 24 ஆயிரத்து 171 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணி 8 ஆயிரத்து 825 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆயிரத்து 763 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 15 ஆயிரத்து 346 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

10:08 AM, 13 Jul 2024 (IST)

3வது சுற்று முடிவில்....

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் மூன்றாவது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 18 ஆயிரத்து 57 வாக்குகளும், பாமக வேட்பாளர் அன்புமணி 7 ஆயிரத்து 323 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயா ஆயிரத்து 120 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, 10 ஆயிரத்து 737 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னில வகித்து வருகிறார்.

9:45 AM, 13 Jul 2024 (IST)

மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதல் இரண்டு சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 6 ஆயிரத்து 98 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். தற்போது மூன்றாவது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

9:41 AM, 13 Jul 2024 (IST)

2 வது சுற்று நிலவரம்:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 2 வது சுற்று நிலவரம்:

அன்னியூர் சிவா (திமுக)- 12,002 வாக்குகள்,

அன்புமணி (பாமக )- 5,904 வாக்குகள்,

அபிநயா (நாதக)- 849 வாக்குகள்.

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 6 ஆயிரத்து 98 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

9:11 AM, 13 Jul 2024 (IST)

அன்னியூர் சிவா எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை?

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முன்னிலை விபரம்:

திமுக: அன்னியூர் சிவா- 5,564 வாக்குகள்,

பாமக: அன்புமணி- 2,894 வாக்குகள்,

நாம் தமிழர்: அபிநயா- 303 வாக்குகள்.

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 2 ஆயிரத்து 670 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

9:04 AM, 13 Jul 2024 (IST)

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு நிலவரம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், முதல் சுற்றில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா- 8,564 வாக்குகள்,

பாமக வேட்பாளர் அன்புமணி- 3,096 வாக்குகள்,

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா - 438 வாக்குகள் பெற்றுள்ளனர்.

8:45 AM, 13 Jul 2024 (IST)

முதல் சுற்றில் திமுக முன்னிலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 2 ஆயிரத்து 630 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

8:42 AM, 13 Jul 2024 (IST)

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முதல் சுற்று நிலவரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முதல் சுற்று நிலவரம்:

திமுக - 4148

பாமக - 1900

நாதாக - 49

2,248 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அந்நியூர் சிவா முன்னிலை வகிக்கிறார்.

8:27 AM, 13 Jul 2024 (IST)

தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் முன்னிலை..

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 798 வாக்குகள் ஒரே சுற்றில் 2 மேஜையில் எண்ணப்பட்டது. இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முன்னிலை வகித்து வருகிறார். 30 நிமிடங்களில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, பிறகு மின்னணு வாக்குகள் எண்ணப்பட உள்ளன. தற்போது வரை 130 தபால் வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

8:21 AM, 13 Jul 2024 (IST)

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

6:50 AM, 13 Jul 2024 (IST)

எப்போது தெரியும் வெற்றி நிலவரம்?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6:47 AM, 13 Jul 2024 (IST)

முதலில் தபால் வாக்குகள்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட உள்ளன. அதை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தபால் வாக்குகள் கொண்டு வரப்படுகின்றன.

6:47 AM, 13 Jul 2024 (IST)

8:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8.30 மணி முதல் எண்ணப்பட உள்ளன.

Last Updated : Jul 13, 2024, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.