விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை.13) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 9 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 9வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 57 ஆயிரத்து 483 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 24 ஆயிரத்து 130 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா 4 ஆயிரத்து 704 வாக்குகள். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 33 ஆயிரத்து 351 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியும், தொகுதியில் ஆங்காங்கேயும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திமுக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தற்போது 9 சுற்றுகள் நிறைவு பெற்று உள்ள நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 33 ஆயிரம் வாக்குகளை கடந்து முன்னிலை வகித்து வருவதால் திமுகவின் கை சற்று ஓங்கியே காணப்படுகிறது.
இதையும் படிங்க: LIVE: திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! - VIKRAVANDI BYELECTION RESULT 2024