ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: வேலூரில் திமுக கதிர் ஆனந்த் வெற்றி! - LOK SABHA ELECTION RESULTS 2024

Vellore Lok Sabha Election results 2024 : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். மேலும், வேலூரில் பதிவான வாக்குகளின் முழு விபரத்தை காணலாம்..

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள்
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:05 PM IST

Updated : Jun 4, 2024, 7:01 AM IST

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் பாஜக வேட்பாளர் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 2,15,702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்திய தேர்தல் ஆணைய இணைத்தள விபரம்...

வ.எண்வேட்பாளர்கட்சிகள்பெற்ற வாக்குகள்
1கதிர் ஆனந்த்தி.மு.க5,68,692
2ஏ.சி.சண்முகம்பு.நீ.க3,529,90
3பசுபதிஅ.தி.மு.க1,17,682
4மகேஷ் ஆனந்த்நா.த.க53,284
  • வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 3,98,568 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசுபதி 77,066 வாக்குகளும், பாஜக கூட்டணியிலுள்ள புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் 2,35,191 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி மகேஷ் ஆனந்த் 33,276 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து திமுக கதிர் ஆனந்த் பாஜக வேட்பாளர் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகத்தை விட 1,63,377 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 05.05 PM நிலவரம்
  • வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 2,47,403 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசுபதி 46,444 வாக்குகளும், பாஜக கூட்டணியிலுள்ள புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் 1,56,199 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி மகேஷ் ஆனந்த் 21,396 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து திமுக கதிர் ஆனந்த் பாஜக வேட்பாளர் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகத்தை விட 91,204 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 03.09 PM நிலவரம்
  • வேலூர் மக்களவைத் தொகுதியில் இரண்டாம் சுற்று முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 1,22,260 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசுபதி 27,626 வாக்குகளும், பாஜக கூட்டணியிலுள்ள புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் 83,991 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி 12,189 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து திமுக கதிர் ஆனந்த் பாஜக வேட்பாளர் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகத்தை விட 38,269 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 12.40 PM
  • வேலூர் மக்களவைத் தொகுதியில் இரண்டாம் சுற்று முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 58,749 வாக்குகளும், அதிமுக 14,990 வாக்குகளும், பாஜக 40,322 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி 2,300 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து திமுக கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். - 11.04 AM

இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட 'சிப்பாய் புரட்சி' நடைபெற்ற வேலூர் கோட்டை இன்றளவும் வேலூரின் பெருமையாகத் திகழ்கிறது. கர்நாடகாவில் உருவாகும் பாலாறு தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் அதிக தூரம் கடந்து செல்கிறது. பாலாற்றின் கரையோரம் தான் வேலூர் அமைந்துள்ளது. 2024 தேர்தலில் இங்கு திமுக சார்பில் மீண்டும் கதிர் ஆனந்த் வேட்பாளராகப் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பசுபதியும், புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மகேஷ் ஆனந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர்.

திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட கதிர் ஆனந்த், மக்களின் கோரிக்கைகளுக்கு எந்தளவு தீர்வு கண்டுள்ளார் என்பதும், பாஜக-பாமக கூட்டணியிலுள்ள புதிய நீதிக் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இத்தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஒப்பீட்டளவில் அதிமுகவைவிட பாமக வலுவாக உள்ள இத்தொகுதியில், 2019 இல் பெற்ற வெற்றியைப் போல, திமுக மீண்டும் வெற்றி பெறுமா என்பது நாளைய தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

2019 தேர்தலில் வென்றது யார்?: திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த 4,85,340 வாக்குகளும், புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றனர். 8,141 வாக்குகள் அதிகம் பெற்று கதிர் ஆனந்த் வெற்றிப் பெற்றார்.

முன்னதாக, திமுக முக்கிய பிரமுகர்கள் சிலரின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, வேலூர் தொகுதியில் தேர்தலை அறிவிப்பை ரத்து செய்வதாக அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இத்தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: தேர்தல் 2024: விடாமுயற்சியில் ஏசிஎஸ்... வேலூரில் வெல்லப் போவது யார்? - Vellore Lok Sabha Election Result

Last Updated : Jun 4, 2024, 7:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.