ETV Bharat / state

ரயிலில் சிக்கி 25 கிமீ இழுத்து வரப்பட்ட இளைஞர் சடலம்.. பதறிப்போன பயணிகள்..காட்பாடியில் பரபரப்பு! - Youth body found in train - YOUTH BODY FOUND IN TRAIN

Youth body found in train: கால்கள் இரண்டும் துண்டான நிலையில் சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேல் வாலிபர் சடலத்தை இழுத்து வந்த ரயிலால் காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்
ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 10:13 AM IST

வேலூர்: சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11:45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் இன்ஜின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் வாலிபரின் சடலம் ஒன்று சிக்கி இருந்தது.

இதனைக் கண்டு பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனைக் கண்டு கீழே இறங்கிய இன்ஜின் ஓட்டுநர், இரயிலில் வாலிபர் பிணம் சிக்கி இருந்ததை கண்டுபிடித்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார், இரயில் இன்ஜினில் சிக்கி இருந்த வாலிபர் பிணத்தை மீட்டனர்.

அப்பொழுது வாலிபர் உடலில் இரண்டு கால்களும் துண்டாகி இருந்தது. மேலும் இரயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களும் தலையில் பலத்த காயமும் ஏற்பட்டு இருந்தது. மேலும் வாலிபரின் கால்கள் எங்கு கிடக்கிறது என்பது தெரியவில்லை. இதனால் காட்பாடி இரயில்வே போலீசார் தண்டவாள பகுதியில் வாலிபரின் கால்களை தேடிச் சென்றனர்.

இறந்த வாலிபர் சிவப்பு நிற டி-ஷர்ட் நீல நிற பேண்ட் அணிந்திருந்தார். இதனால் வாலிபர் யார் என்பதும்? எந்த இடத்தில் சிக்கினார் என்பதும் தெரியவில்லை. இதனையடுத்து இளைஞரின் உடலை மீட்ட போலீசார், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்த போது இன்ஜின் முன் பக்கத்தில் வாலிபரின் பிணம் இல்லை. அதற்கு பிறகு வாலாஜா முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் தான் இன்ஜினில் வாலிபர் சிக்கி இருந்துள்ளார்.

சுமார் 25 கிலோமீட்டர் அங்கிருந்த வாலிபரின் பிணத்தை பிணத்தை காட்பாடி ரயில் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளது தெரியவந்தது. மேலும் இறந்த வாலிபர் யார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என காட்பாடி இரயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்ச சம்பவத்தில் காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தந்தை துய்மை பணியாளராக இருந்த ஆபிஸில் மகள் கமிஷனர்.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் சாதித்த திருவாரூர் பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.