கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், உடுமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா ஆடுகள், கறவை பசுக்கள், நாட்டுக்கோழிகள் என ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேருக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகள் வாழ்வாதாரம் உயர்வதற்கு இந்த திட்டங்கள் முக்கிய காரணமாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் மிகப்பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், தற்போது இதுபோன்ற நல்ல திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கறவை பசு, வெள்ளாடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : மகப்பேறு விடுமுறைக்குச் செல்லும் பெண் காவலர்களுக்கு குட் நியூஸ்.. ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு! - Police Maternity Leave