மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள கருணாநிதி படிப்பகம் வளாகத்தில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எட்டே கால் (8 .1/4) அடி உயரமுள்ள முழு உருவ வெண்கல சிலை இன்று (செப்.26) நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக அமைச்சர் உதயநிதி 60 அடி உயரம் கொண்ட திமுக கொடிக்கம்பத்தை திமுக கொடியை ஏற்றினார்.
அப்போது அவருக்கு மாவட்ட திமுக சார்பில் புத்தர் சிலை மற்றும் செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "சாப்பாடு போடுவதால் அம்மா ஆனோம்" - கோவை டூ கேரளா வரை மணமணக்கும் பிரியாணி.. திருநங்கை சமையல் குழுவின் நெகிழ்ச்சிக் கதை!
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி கூறுகையில், “கருணாநிதியின் முதல் உருவ சிலையை மயிலாடுதுறை மாவட்டத்தில் திறந்து வைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பெற்ற தலைவர் கருணாநிதி. இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர். கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி, பாசிச, பாஜக கூட்டணிக்கு கடிவாளம் போட்டுள்ளது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்