ETV Bharat / state

அஜித்துக்கு அழைப்பு விடுக்கும் உதயநிதி ஸ்டாலின்! விஜய்க்கு போட்டியா? - UDHAYANIDHI WISHES TO AJITHKUMAR

துபாயில் நடைபெறவுள்ள GT3 கார் பந்தயத்தில் பங்கேற்றதற்காக நடிகர் அஜித் குமாருக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில் இது கட்சி தொடங்கியிருக்கும் விஜயை கோபப்படுத்தும் முயற்சியா என கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன்.

விஜய், உதயநிதி, அஜித்(கோப்புப்படம்)
விஜய், உதயநிதி, அஜித்(கோப்புப்படம்) (Credit - tvkvijayhq and Udhaystalin X Account, shaliniajithkumar2022 Instagram)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 3:39 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இது மீண்டும் சினிமா நட்சத்திரங்களின் காலமோ என எண்ணும் அளவுக்கு நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பின்னதான விவாதங்கள் சூடு பறக்கத் தொடங்கியுள்ளன. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, விஜயகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் ஒரு திரைமுகம் மையம் கொண்டுள்ளது. இதற்கிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமாக்களில் நடித்திருந்தாலும் மிகச்சுருக்கமான அவரது திரையுலக வாழ்க்கையை மற்ற நட்சத்திரங்களுடன் ஒப்பிட முடியாது.

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை அறிவித்த விஜய், அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் வி.சாலையில் வெற்றிக் கொள்கை விளக்க மாநாட்டை நடத்தி கட்சிக்கான கொள்கைகளையும் அறிவித்தார். இதில் மதபிளவுவாத சக்திகள் மற்றும் ஊழல் ஒழிப்பு என இரண்டு அம்சங்களை முன்னிறுத்தப் போவதாக விஜய் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டை ஆளும் கட்சி என குறிப்பிட்டு திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை விஜய் முன்வைத்தார்.

விஜயின் மாநாட்டுக்கு முதல் நாளே உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்த போதிலும், மாநாட்டுக்குப் பின் இது தொடர்பான கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க மறுத்துவிட்டார். மு.க.ஸ்டாலின், கனிமொழி என திமுக முன்னிலைத் தலைவர்களிடமும் இதற்கான பதில் இல்லை. ஆனால் அமைச்சர்கள், எம்.பி.க்கள் தொடர்ச்சியாக விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் நடிகர் அஜித்துக்கு உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். துபாயில் நடைபெறும் GT3 கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக (24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class) இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை 'அஜித் குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உதயநிதி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

"தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்துக்கு, தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்ட உதயநிதி, விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித்" என பதிவிட்டுள்ளார்.

இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என்றாலும் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் "ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்ற வார்த்தையுடன் உதயநிதி பதிவிட்டிருப்பதை அரசியலாக்கும் முயற்சியும் நடைபெறாமல் இல்லை. இதனை குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், "உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். ஒருவேளை விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என எனக்கு தெரியாது" எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:

"ஆட்சியில் பங்கு" விஜயின் அரசியல் அணுகுண்டு : வேலை செய்யுமா?

"விஜயை ரசிக்கலாம், ஆனா ஓட்டு எனக்குத் தான்" - சீமான் தடாலடி பதில்!

ஆனால் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து சொல்லிவிட்டு சென்னையில் மாநகராட்சி விளையாட்டுத் திடல்களை தனியார் மயமாக்குவதையும் அவர் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார். விளையாட்டை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவரும் நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான உதயநிதியின் செயல்பாடு இதனை ஊக்குவிக்காது என தமிழிசை சுட்டிக்காட்டுகிறார்.

அஜித்தும் அரசியலும்: தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக நடிகர் அஜித் அறியப்பட்டாலும், சினிமாவைத் தாண்டி வேறு எந்த பொது செயல்பாடுகளிலும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது இல்லை. இதற்கெல்லாம் உச்சமாக 2011ம் ஆண்டு அவரது 50வது திரைப்படமான மங்காத்தா வெளியான போது தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாகவும் அஜித் அறிவித்தார்.

அஜித்தும் திமுகவும்: 2010ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்காக நடைபெற்ற பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா நிகழ்ச்சியின் போது, மேடையில் பேசிய அஜித் குமார் திரைக் கலைஞர்களை பொதுவிவகாரங்களில் கருத்து தெரிவிக்குமாறும், போராட்டங்களில் பங்கெடுக்குமாறும் சிலர் மிரட்டுவதாகக் கூறினார். அஜித்தின் இந்த பேச்சுக்கு பார்வையாளர் வரிசையில் இருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றார். அப்போது இது மிகவும் சர்ச்சையான பேச்சாக பார்க்கப்பட்டது.

அஜித்தும் அ.தி.மு.க.வும்: 2000ல் அஜித் - ஷாலினி ஜோடியின் திருமணத்தின் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று வாழ்த்தினார். 2016 ல் ஜெயலலிதா மறைவின் போது பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜித், இறுதிச்சடங்கிற்குப் பின்னரே தமிழ்நாட்டிற்கு வர முடிந்தது. விமான நிலையத்திலிருந்து நேரடியாக மெரினா சென்ற அஜித் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னரே வீட்டுக்குச் சென்றார்.

அஜித்தும் விஜயும் போட்டியா?: எம்.ஜி.ஆர். Vs சிவாஜி, ரஜினி Vs கமல் என சமகாலத்து போட்டியாளர்கள் வரிசையில் விஜயும் , அஜித்தும் முன்னிறுத்தப்படுகின்றனர். இருவரின் திரைப்படங்களிலும் பஞ்ச் வசனங்கள், அனல் தெறிக்கும் பாடல் வரிகள் என ஒருவருக்கொருவர் சவால் விடுவது போன்று வெளியான நாட்களெல்லாம் இருக்கின்றன. ஆனாலும் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் அஜித்துக்கான ரெஃபரென்ஸ் காட்சிகளும் இருந்தன. இதெல்லாம் போக சமீபத்தில் விஜயின் வி.சாலை மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் பேனர் வைத்த காட்சிகளும் நடந்தன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.