தருமபுரி: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மாலையில் தருமபுரி மாவட்டம், ஒடசல்பட்டி பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸைக் கவனித்த உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சை நிறுத்திக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடுமாறு தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இந்த இடைப்பட்ட குழந்தையுடன் வந்த பெற்றோர், இந்த குழந்தைக்குப் பெயர் வையுங்கள் என கூறினர். குழந்தை ஓரளவு பெரிய குழந்தையாக இருப்பதால், இன்னுமா பெயர் வைக்காமல் இருக்கிறீர்கள் என உதயநிதி கேள்வி எழுப்பினார்.
ஏற்கெனவே பெயர் சூட்டியுள்ளதாகப் பெற்றோர் கூற, என்ன பெயர் என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ரோலக்ஸ் என பெயர் சூட்டியிருப்பதாகக் கூறவும், அதுவே நல்ல பெயர் தான் அப்படியே இருக்கட்டும் என கூறினார் உதயநிதி ஸ்டாலின். ரோலக்ஸ் என்பது பெற்றோர் வைத்த பெயர் தான் என்பதும் உதயநிதி ஸ்டாலின் சூட்டிய பெயர் இல்லை என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.
இதையும் படிங்க: எனக்கு ஓட்டு போடுங்க, போடாம போங்க… ஊழல்வாதிகளுக்கு மட்டும் போடாதீங்க - சீமான் பிரச்சாரம்! - VILUPURAM SEEMAN CAMPAIGN